digit zero1 awards

WhatsApp யில் வருகிறது ஜூம் கண்ட்ரோல் மற்றும் ஷார்ட்கட் ஸ்டிக்கர் கிரியேசன்

WhatsApp யில் வருகிறது ஜூம் கண்ட்ரோல் மற்றும் ஷார்ட்கட் ஸ்டிக்கர் கிரியேசன்
HIGHLIGHTS

WhatsApp OS யில் பீட்டா டெஸ்டர்களுக்காக இரண்டு புதிய அம்சங்களை வெளியிடுகிறது,

இது மெசேஜிங் தளத்திற்கு புதிய அம்சங்களைக் கொண்டுவரும்

புதிய ஷார்ட்கட் மூலம் ஸ்டிக்கர்களை உருவாக்க Meta AI பயன்படுத்த அனுமதிக்கிறது

WhatsApp OS யில் பீட்டா டெஸ்டர்களுக்காக இரண்டு புதிய அம்சங்களை வெளியிடுகிறது, இது மெசேஜிங் தளத்திற்கு புதிய அம்சங்களைக் கொண்டுவரும். முதல் அம்சம் வாட்ஸ்அப்பில் உள்ள ஆப்ஸ் கேமராவைப் பயன்படுத்தி பெரிதாக்குவதை மிகவும் எளிதாக்குகிறது. மற்றொரு அம்சம் பயனர்கள் தங்கள் கேமரா ரோலில் இருந்து புதிய ஸ்டிக்கர்களை பாஸ்ட்டாக உருவாக்க அல்லது புதிய ஷார்ட்கட் மூலம் ஸ்டிக்கர்களை உருவாக்க Meta AI பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த இரண்டு அம்சங்களும் iOS மற்றும் Android ஸ்மார்ட்போன்களில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப்பின் வரவிருக்கும் அம்சங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்

iOS 24.9.10.75க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் புதிய ஜூம் கட்டுப்பாட்டு அம்சத்தை அம்ச டிராக்கர் WABetaInfo கண்டறிந்துள்ளது. TestFlight மூலம் iOSக்கான வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்சனை பெறப் பதிவுசெய்த பயனர்கள் இப்போது புதிய கேமரா ஜூம் கட்டுப்பாட்டுப் பட்டனை அணுகுவதற்குப் அப்டேட் செய்து கொள்ளலாம் இது பல ஜூம் ஆப்சனுக்ல்கு இடையே மாற உங்களை அனுமதிக்கும்.

வ்யூஃபைண்டரின் உள்ளேயும் வெளியேயும் கிள்ளுதல் அல்லது கேப்சர் பட்டனை அழுத்தும்போது மேல்நோக்கி ஸ்வைப் செய்வதன் மூலம் ஆப்ஸ் கேமராவைப் பயன்படுத்த WhatsApp தற்போது அனுமதிக்கிறது. இந்த இரண்டு விருப்பங்களும் ஜூம் பட்டனைப் பயன்படுத்துவது போல் எளிதானது அல்ல, இது எதிர்காலத்தில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WABetaInfo ஷேர் செய்த விவரங்களின்படி, இந்த வார தொடக்கத்தில், iOS 24.9.10.74 அப்தேட்க்கான WhatsApp பீட்டாவுடன் பீட்டா டெஸ்ட்டர்களுக்கு மற்றொரு அம்சத்தை மெசேஜ் தளம் வெளியிட்டது. இந்தப் வெர்சனை இன்ஸ்டால் செய்த பயனர்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் தேர்வுப் பேனலைத் திறக்கும்போது AI ஷார்ட்கட்களை உருவாக்கவும் பயன்படுத்தவும் என்பதைக் காண்பார்கள்.

இதையும் படிங்க Samsung யின் இந்த போனின் அறிமுக தேதி வெளியானது அதற்க்கு முன்பே பல லீக்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo