WhatsApp யின் புதிய அம்சம் உங்களின் செல்பி போட்டோவை உருவாக்கலாம் ஸ்டிக்கராக

Updated on 16-Jan-2025

WhatsApp யில் வந்துள்ளது புதிய அம்சம், பயனர்கள் இப்போது ஆப்யின் புதிய கேமரா எபக்ட் பெறுவார்கள். கஸ்டமைஸ் செல்ஃபி ஸ்டிக்கர்களுக்கான விருப்பம் இருக்கும். ஸ்டிக்கர் பேக்குகளைப் ஷேர் செய்வது எளிதாகிவிடும், மேலும் ஒரு மெசேஜ் ரியாக்ஷன் செய்வது முன்பை விட வேகமாகவும் எளிதாகவும் இருக்கும். மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் அதன் செயலியில் புதிய அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அதன் புதிய அம்சங்களை வழங்குவதன் மூலம், மக்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆண்டு முழுவதும் புதிய வசதிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp யின் வந்துள்ள புதிய ஸ்டிக்கர் அம்சம்

Camera Effect: புதிய அம்சங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கேமரா எபக்ட். கடந்த ஆண்டு வாட்ஸ்அப் வீடியோ காலிங் எபக்ட்களை அறிமுகப்படுத்தியது. அதன் உதவியுடன், மக்கள் வீடியோ காலின் போது பேக்ரவுண்டை மாற்ற முடியும். மக்கள் இந்த அம்சத்தை மிகவும் விரும்பினர், அதன் பிறகு இப்போது ஷேர் செய்யப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களிலும் எபக்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராமில் காணப்படும் எபக்ட்களால் இவை ஓரளவிற்கு ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. அறிக்கைகளின்படி, பயனர்கள் தங்கள் போட்டோ மற்றும் வீடியோக்களை சுமார் 30 பேக்ரவுண்ட், பில்டர்கள் மற்றும் எபக்ட்களின் உதவியுடன் அப்டேட் செய்ய முடியும்.

WhatsApp

Selfie sticker: வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது தங்கள் செல்ஃபிகளை ஸ்டிக்கர்களாக மாற்ற முடியும். இதற்கு நீங்கள் “Create Sticker” விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, எடுக்கப்பட்ட செல்ஃபி தானாகவே ஸ்டிக்கராக மாற்றப்படும், இது சேட்டின் போது பயன்படுத்தப்படலாம்.

Share stickers pack: இந்த ஸ்டிக்கர் பேக் உங்கள் நண்ம்பர்மிகவும் விரும்பலாம், அதாவது கிடைத்த ஸ்டிக்கர் பேக் அவர்களுக்கு நேரடியாக செட்டில் அனுப்ப முடியும்.

Quicker reactions: ஒருவர் மற்றவரின் மேசெஜ்களுக்கு பதிலளிக்க ஏராளமான எமோஜிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த ரியாக்ஷன் இப்போது வேகமாக மாறிவிட்டது. ரியாக்ட் செய்ய வேண்டிய மெசேஜை இருமுறை தட்டினால் அல்லது நீண்ட நேரம் அழுத்தினால் ஈமோஜி தோன்றும். இது மெசெஜ்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் ரியாக்ஷன் செய்கிறது. அதேபோல், இப்போது ஸ்டிக்கர் பேக்குகளை சேட்டுக்கு செல்வதன் மூலம் மட்டுமே ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடியும்.

இதையும் படிங்க:Vodafone idea இரண்டு திட்டம் அறிமுகம் விலையில் வித்தியசம் நன்மை ஒரே மாதுரி இருக்கு ஏன் பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :