digit zero1 awards

WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் இனி ஸ்டேட்டசில் வொயிஸ் வைக்கலாம்

WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் இனி ஸ்டேட்டசில் வொயிஸ் வைக்கலாம்

WhatsApp யின் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இங்கு பயனர்கள் ஒரு நீண்ட வொயிஸ் மெசேஜை ஷேர் செய்யும் வசதியை வழங்குகிறது, இந்த அம்சம் ஆப் யின் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு வேர்சங்கள் இரண்டிற்கும் கிடைக்கிறது. மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ் தளமானது, AI-ஜெனரேட்டட் ப்ரோபைல் பிக்ஜர் மற்றும் அன்ரீட் மெசேஜ்களை எண்ணிக்கையை அழிக்கும் விருப்பம் போன்ற பல புதிய அம்சங்களில் சமீபத்தில் செயல்பட்டு வருகிறது.

Longer voice status updates on WhatsApp

முன்னதாக வாட்ஸ்அப்பில், பயனர்கள் 30 வினாடிகள் வரை வொயிஸ் நோட்ஸ் ஸ்டேட்டஸ் அப்டேட்களை ஷேர் செய்து கொள்ளலாம். வொயிஸ் மெசேஜை ஷேர் செய்ய ஸ்ட்ட்டஸ் அப்டேட் பக்கத்தில் உள்ள மைக்ரோஃபோன் ஐகானைத் தட்டிப் பிடிக்க வேண்டும். இப்போது, ​​பிளாட்பாரம் வொயிஸ் நோட்ஸில் கால அளவை ஒரு நிமிடமாக அதிகரித்துள்ளது.

நாம் இந்த அம்சத்தை இந்த டிவைசில் இந்த அம்சம் உள்ளது என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது. 1 நிமிடம் நீளமான வொயிஸ் மெசேஜ்களை இப்போது ஸ்டேட்டஸ் அப்டேட்டாக ஷேர் செய்ய முடியும் என்பதை எங்கள் டெஸ்ட்டில் கண்டறிந்தோம். இந்த அம்சம் இப்போது Android மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கிறது. இந்த அம்சத்தின் வெளியீடு, நீண்ட வொயிஸ் மெசேஜ்களை பல பகுதிகளாகப் பிரித்து அதிகபட்சம் 30 வினாடிகளுக்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களாக போஸ்ட் செய்யும் வசதியை அதிகரிக்கும்.

வாட்ஸ்அப் வழக்கமாக படிப்படியாக அப்டேட்களை வெளியிடுகிறது, எனவே உங்கள் டிவைசில் இந்த அம்சம் கிடைக்கவில்லை என்றால், முதலில் ஆப்பை சமீபத்திய வெர்சனிர்க்கு அப்டேட் செய்ய பரிந்துரைக்கிறது இருப்புனும் நீங்கள் அதைப் பெறவில்லை என்றால், நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

இது தவிர, வாட்ஸ்அப் அப்டேட் டிராக்கரான WABetaInfo யின் படி, பயனர்களுக்கு பல புதிய அம்சங்களைக் கொண்டுவருவதில் பிளாட்பாரம் செயல்படுகிறது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அம்சங்களில் ஒன்று கிரியேட் வித் AI ஆகும், இது AI-ஜெனரேட்டட் ப்ரோபைல் பிக்ஜர் உருவாக்க பயனர்களை அனுமதிக்கிறது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் ஆர்வங்கள், மனநிலைகளுடன் பொருந்தக்கூடிய பர்சனளைஸ்ட் இமேஜ் உருவாக்க ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) பயன்படுத்த முடியும்.

இதை தவிர சேட் தீம் அம்சம் டெவலப் செய்யப்படுகிறது, அறிக்கைகளின்படி, WhatsApp விரைவில் பயனர்கள் ஐந்து முன்னமைக்கப்பட்ட தீம்களில் இருந்து தேர்வு செய்யலாம் – நீலம், பச்சை (இது இயல்புநிலை), க்ரே சிவப்பு மற்றும் ஊதா. தீம் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சேட்டை நிறத்தையும் சேட் பேக்ரவுண்டை மாற்றலாம்.

இதையும் படிங்க TCL அறிமுகம் செய்தது 75-இன்ச் சைஸ் வரையிலான புதிய ஸ்மார்ட் TV

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo