இனி நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒருவரின் அனுமதி இல்லாமல் க்ரூபில் சேர்க்க முடியாது.
புதிய பிரவைசி செட்டிங் சில பயனர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என்றும் உலகம் முழுக்க வரும் வாரங்களில் படிப்படியாக வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் நாம் மிகவும் எதிர் பார்த்து காத்து கொண்டிருந்த குரூப் பர்மிசன் வசதி அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய அம்சத்திற்க்காக நம்மில் பலர் காத்து கொண்டிருந்தார்கள் அதாவது நம் அனுமதியின்றி யாரு வேண்டுமானாலும் ஒரு க்ரூபில் சேர்க்கப்பட்டு வந்து இருந்தது,, இதில் யாரு வேண்டுமானாலும் அவரது அனுமதியின்றி ஒரு க்ரூபில் சேர்க்கலாம், இப்பொழுது இவ்வாறு இல்லாமல் அதை கண்ட்ரோல் செய்யும் வகையில் ஒரு புது அம்சத்தை கொண்டு வர உள்ளது. இப்பொழுது உங்களை ஒரு க்ரூபில் சேர்க்க விரும்பினால் உங்களின் அனுமதியின்றி அவ்வாறு சேர்க்க முடியாது இனி உங்களை அந்த க்ரூபில் சேர்க்கும் பொது உங்கள் பர்மிசன் தேவை படும்..
தற்பொழுது புதியதாக வாட்ஸ்அப்பில் அதன் பிரைவசி செட்டிங்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி புதிய செட்டிங்களை செயல்படுத்தும் போது யார் உங்களை க்ரூப்களில் சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். இதனை செயல்படுத்த அக்கவுண்ட் — பிரைவசி — க்ரூப்ஸ் ஆப்ஷன்களை செலக்ட் செய்து நோபடி (Nobody), மை காண்டாக்ட்ஸ் (My Contacts) அல்லது எவ்ரிவொன் (Everyone) என மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
இவற்றில் நோபடி ஆப்ஷனை செலக்ட் செய்யும் போது நீங்கள் இணைக்கப்படும் க்ரூப்களில் நீங்கள் அனுமதியளித்தால் சேர்ந்து கொள்ளலாம். மை காண்டாக்ட்ஸ் ஆப்ஷன் உங்களது காண்டாக்ட்களில் இருப்பவர் மட்டுமே உங்களை க்ரூப்களில் சேர்க்கும் வசதியை வழங்கும்.
புதிய அம்சங்களின் மூலம் பயனர் அவர்களுக்கு வரும் க்ரூப் மெசேஞ்களை கட்டுக்குள் வைக்க முடியும். புதிய பிரவைசி செட்டிங் சில பயனர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என்றும் உலகம் முழுக்க வரும் வாரங்களில் படிப்படியாக வழங்கப்படுகிறது.
WhatsApp Group Invitation அம்சம் எப்படி வேலை செய்யும் ?
இதனுடன் இந்த Group Invitaion அம்சம் மூன்று ஒப்ஷன்களில் வருகிறது, இதில் முதல் ஒப்ஷன் எவ்ரி ஒன் ஒப்ஷன் இந்த அம்சத்தின் மூலம் யாரு வேண்டுமானாலும் உங்களின் அனுமதியின்றி எந்த க்ரூப்பில்
வேண்டுமானாலும் சேர்க்கலாம். இது வரையிலும் அது போல தான் நடந்து வருகிறது. இரண்டாவது ஒப்ஷன் My Contact உங்கள் காண்டக்ட் லிஸ்டில் இருக்கும் எந்த நபர் வேண்டுமானாலும் உங்கள் அனுமதியின்றி க்ரூப்பில் உங்களை சேர்க்கலாம். இப்பொழுது இதில் உங்கள் கான்டெக்ட் லிஸ்டில் இல்லாதவர்களை உங்கள் அந்த க்ரூப்பில் சேர்க்க அவர்களின் பர்மிசன் தேவை படும். இந்த மூலம் உங்களுக்கு ஒரு அலர்ட் வரும் க்ரூப்பில் சேர இஷ்டமா அல்லது இல்லையா என்று இதில் நீங்கள் இல்லை என்பதையும் செலக்ட் செய்யலாம்.
இதை தவிர இதன் மூன்றாவதாக இருக்கும் ஒப்ஷனை பற்றி பேசினால் Nobody என்ற பெயரை கொண்டுள்ளது இந்த ஒப்ஷனின் கீழ் உங்கள் கான்டெக்ட் லிஸ்டில் இருக்கும் அல்லது மற்றவரோ யாரும் உங்களை எந்த க்ரூப்பிலும் சேர்க்க முடியாது. இருப்பினும் அப்படி உங்களை யாராவது ஏதாவது க்ரூப்பில் சேர்க்க விரும்பினால் உங்களின் அனுமதி தேவையாக இருக்கும் இதன் மூலம் உங்களுக்கு வரும் அலர்ட் மெல்லாம் நிராகரிக்கவும் செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் யாரும் உங்களை எந்த க்ரூப்பிலும் சேர்க்க முடியாது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile