WhatsApp profile போட்டோவுக்கு இனி அதி பயங்கர செக்யூரிட்டி

Updated on 26-Feb-2024
HIGHLIGHTS

WhatsApp யில் ஒரு புதிய அம்சம் கொண்டு வந்துள்ளது,

இது இப்போது பயனரின் ப்ரோபைல் போட்டோவிற்கு கூடுதல் செக்யூரிட்டி வழங்கும்.

இப்போது ப்ரொஃபைல் போட்டோவிற்கு மற்றொரு செக்யூரிட்டி அம்சத்தை வாட்ஸ்அப் வழங்கியுள்ளது,

WhatsApp யில் ஒரு புதிய அம்சம் கொண்டு வந்துள்ளது, இது இப்போது பயனரின் ப்ரோபைல் போட்டோவிற்கு கூடுதல் செக்யூரிட்டி வழங்கும். இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்சனில் கிடைக்கிறது. இதன் மூலம் பயனரின் ப்ரொஃபைல் போட்டோவை இப்போது மேலும் பாதுகாப்பானதாக மாறும். முன்னதாக, மெசஞ்சர் ஆப் ஆனது அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து ப்ரோபைல் போட்டோ மறைத்து வைக்க பயனரை அனுமதித்தது. இப்போது ப்ரொஃபைல் போட்டோவிற்கு மற்றொரு செக்யூரிட்டி அம்சத்தை வாட்ஸ்அப் வழங்கியுள்ளது, அதில் பயனரின் ப்ரொஃபைல் போட்டோவின் ஸ்கிரீன் ஷாட் கூட எடுக்க முடியாது. இந்த புதிய செக்யூரிட்டி அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதை பற்றி இங்கு தெளிவாக பார்க்கலாம்.

WhatsApp பயனர்கள் ப்ரொஃபைல் பிக்ஜர் சேமிப்பது அல்லது டவுன்லோட் செய்வது போன்ற அம்சத்தை சில ஆண்டுகளுக்கு முன் அதை மூடியது, இப்போது மெசேஜிங் ஆப் ஸ்கிரீன் ஷாட்களுக்கும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது. WABetaInfo யின் அறிக்கையின்படி, WhatsApp ஆனது பீட்டா வெர்சனில் ப்ரொஃபைல் போட்டோவின் ஸ்கிரீன்ஷாட்டை நிறுத்தும் அம்சத்தை உள்ளடக்கியுள்ளது. இந்த அம்சம் இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கும். புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நீங்கள் பயனரின் ப்ரொஃபைல் போட்டோவின் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க முயற்சிக்கும் போதெல்லாம், ஸ்க்ரீன் கருப்பு நிறமாக மாறும், மேலும் ஆப் கட்டுப்பாடுகள் காரணமாக ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க முடியாது என்ற மெசேஜ் தோன்றும்.

#whatsApp SCREENSHOT BLOCKING

இந்த அம்சத்தின் மூலம், வாட்ஸ்அப் பயனர்கள் உங்கள் அனுமதியைப் பெறாத, அல்லது அதிகாரப்பூர்வமற்ற முறையில் பயனரின் ப்ரொஃபைல் பிக்ஜரை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதைப் ஷேர் செய்ய விரும்பும் பயனர்களைத் தடுக்கிறது. பீட்டா டெஸ்டிங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட க்ரூபில் இந்த அம்சத்திற்கான அக்சஸ் இப்போது வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்.

இதையும் படிங்க: Vivo வின் இந்த ஸ்டைலிஷான போனின் அறிமுக தேதி வெளியானது

மாற்ற அப்டேட்களை பற்றி பேசினால், சமிபத்தில் WhatsApp டெக்ஸ்ட் பார்மெட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது, இவற்றின் மூலம் மெசேஜை சிறந்த முறையில் வழங்க முடியும். இது நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவும். இது தவிர, இப்போது மெசேஜ்கள் மூலம் கம்யூனிகேசன்சிறந்த முறையில் சாத்தியமாகும். மெசேஜிங் ஆப் யில் புல்லெட் லிஸ்ட் (Bulleted Lists), நம்பர் லிஸ்ட் (Numbered Lists), ப்லோக் குவாட்ஸ் (Block Quote) மற்றும் இன்லைன் கோட் (Inline Code) நேம் பார்பெட்டிங் போன்ற ஆப்சன் இருக்கிற்றது , இவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த அறிக்கையில் விரிவாக அறிந்து கொள்ளலாம். இங்கே க்ளிக் செய்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :