WhatsApp யின் புதிய அம்சம் Sharechat வீடியோவை நேரடியாக வாட்ஸ்அப்பில் பார்க்க முடியும்.
Whatsapp நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன்களில் ஷேர்சாட் வீடியோக்களை பார்க்கும் வசதியை வழங்குகிறது
புதிய ஷேர்சாட் வீடியோ வசதி மட்டுமின்றி சாட்களில் வால்பேப்பர்களை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் சோதனை செய்யப்படுகிறது
Whatsapp ஐஒஎஸ் பீட்டா 2.20.81.3 மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.197.7 வெர்ஷன்களில் ஷேர்சாட் வீடியோக்களை ஃபுளோட்டிங் வீடியோவாக பார்க்க முடிகிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன்களில் ஷேர்சாட் வீடியோக்களை பார்க்கும் வசதியை வழங்குகிறது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 2.20.81.3 மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.197.7 வெர்ஷன்களில் ஷேர்சாட் வீடியோக்களை ஃபுளோட்டிங் வீடியோவாக பார்க்க முடிகிறது.
தற்சமயம் புதிய ஷேர்சாட் வீடியோ வசதி மட்டுமின்றி சாட்களில் வால்பேப்பர்களை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் சோதனை செய்யப்படுகிறது. இதை கொண்டு ஒவ்வொரு சாட்களிலும் வெவ்வேறு வால்பேப்பர்களை செட் செய்து கொள்ள முடியும்.முன்னதாக இதே வசதி யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் வீடியோக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது .
வாட்ஸ்அப் செயலியில் வால்பேப்பர்களை கஸ்டமைஸ் செய்யும் வசதி முழுமையாக உருவாக்கப்படவில்லை என தெரிகிறது. அந்த வகையில் இந்த அம்சம் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களின் புதிய வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன்களில் இந்த அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் ஷேர்சாட் வீடியோ பகிரப்பட்டால், அதனை பார்க்க கோரும் பிளே பட்டன் இடம்பெறுகிறது. அதனை க்ளிக் செய்ததும் வீடியோ பிக்சர் இன் பிக்சர் மோட் வடிவில் பிளே ஆகும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile