WhatsApp Meta AI புதிய அம்சம் போட்டோவை  மிக சிறப்பாக எடிட் செய்யலாம்

Updated on 27-Sep-2024

WhatsApp பயனர்களுக்கு சந்தோசமான செய்தி CEO, Mark Zuckerberg இந்த இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பார்மில் Meta AI யின் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டது இந்த லேட்டஸ்ட் அப்டேட்களுடன், WhatsApp பயனர்கள் இப்போது Meta AI உடன் நிகழ்நேரத்தில் தங்கள் வொயிஸ் பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம். அவர்களால் எடிட் செய்ய போட்டோக்களை கூட அனுப்பலாம். இந்த அப்டேட்கள் பெரும்பாலான மக்கள் தங்கள் யோசனைகளை ஆராயவும், அவர்களின் சேட்களை மேம்படுத்தவும், புதிய விஷயங்களை முயற்சிக்கவும் உதவும்.

நிறுவனம் அதன் ஒரு ப்ளாக் போஸ்ட்டில் கூறியுள்ளது, Meta AI உடன் நிகழ்நேரத்தில் உங்கள் வொயிஸ் உடன் பேசுவது அல்லது போட்டோக்களை எடிட் செய்து அனுப்புவது போன்ற புதிய அப்டேட்களை நாங்கள் அறிவித்துள்ளோம். “இந்தப் அப்டேட்கள் அதிகமான மக்கள் தங்கள் யோசனைகளை ஆராய்வதற்கும், அவர்களின்சேட்களை மேம்படுத்துவதற்கும், புதிய விஷயங்களை முயற்சிப்பதற்கும் எளிதாக்கும்.”

WhatsApp-Meta-AI-New-Features.png

WhatsApp Meta AI புதிய அம்சம்.

Talk to me: இப்பொழுது நீங்கள் meta Ai யில் பேசலாம் உங்கள் கேள்வியைக் கேட்க அலைவடிவ பட்டனை அழுத்தினால் போதும், அதன் பிறகு நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தையும் Meta AI உங்களுக்கு விளக்கும். ஏன் என்றால் இப்பொழுது இந்த அம்சம் அனைவருக்கும் ஆரம்பித்துள்ளது எனவே நீங்களும் விரைவில் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் உட்பட பல்வேறு வொயிஸ் விருப்பங்களில் இருந்து செலக்ட் செய்ய முடியும்.

Look at this: இப்போது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய தகவலைப் பெற Meta AIக்கு ஒரு போட்டோவை அனுப்பலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு வெளிநாட்டு மொழியில் ஒரு மெனுவின் படத்தை எடுத்து அதை ட்ரேன்ஸ்லேட் Meta AI ஐக் கேட்கலாம் அல்லது ஒரு போட்டோவை எடுத்து அதை எவ்வாறு பராமரிப்பது என்று கேட்கலாம்.

Edit my photo: நீங்கள் இப்பொழுது மெட்டா Ai மூலம் எடிட் செய்ய மற்றும் மாற்றம் செய்ய இது உதவுகிறது எடுத்துக்காட்டாக, உங்கள் போட்டோவின் பேக்ரவுண்டில் உள்ளவர்களை அகற்றலாம் அல்லது புதிய தோற்றத்தைக் கொடுக்க அதன் நிறத்தை மாற்றலாம்.

உலகளாவிய பிரபலங்களின் வொயிஸ்கள் உட்பட, பயனர்கள் தேர்வுசெய்ய பல வொயிஸ் விருப்பங்களை விரைவில் பெறுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆரம்பத்தில் இந்த வொயிஸ் சேட் மோடை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும், ஆனால் மொழி சப்போர்ட் எதிர்காலத்தில் விரிவாக்கப்படலாம்.

இதையும் படிங்க:Truecaller யின் புதிய அம்சம் இப்பொழுது iphone பயனருக்கும் கிடைச்சாச்சு

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :