digit zero1 awards

இந்த ஹேக்கர்கள் வாட்ஸ்அப் மெசேஜை விட்டுவைக்கல அதையும் ஹேக் பண்ணுறங்கலாம்…!

இந்த  ஹேக்கர்கள்  வாட்ஸ்அப்  மெசேஜை  விட்டுவைக்கல அதையும் ஹேக் பண்ணுறங்கலாம்…!
HIGHLIGHTS

வாட்ஸ்அப் அப்யில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் இடம்பெறுகிறது.

வாட்ஸ்அப் அப்யில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் இடம்பெறுகிறது. இத்துடன் மெசஜ்களை ஃபார்வேர்டு செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்தது. 

https://static.digit.in/default/4ea875af203975c72e97fbf74c31ab8a0415e820.jpeg

எனினும் வாட்ஸ்அப் ஆப்யின் பாதுகாப்பை அப்டேட் செய்ய அந்நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. அதன்படி செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றவும் முடியும் என தெரியவந்துள்ளது.

செக் பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய பிழை, ஆப் யில் அனுப்பப்படும் மெசேஜ்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட சாட் மற்றும் க்ரூப் சாட்   பதிவிட்டவருக்கும் இது பொருந்தும் என்பது கூடுதல் தகவல். ஆகும் 

https://static.digit.in/default/0347ff9be70a7977eb7a539b600e725ccdd782e5.jpeg

இவ்வறு செய்வதால் ஹேக்கர்கள் தங்களுக்கு வேண்டியபடி தகவல்களை மாற்றியமைப்பதோடு, போலி தகவல்களை பரப்பும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு தீர்வுகள் சார்ந்த நிறுவனமான செக் பாயின்ட் தனது வெப்சைட்டில் பதிவிட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்டுள்ள புதிய பிழை, மூன்று வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என வெப்சைட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

https://static.digit.in/default/6ccf665bca71c4dfc3df83d61b5df1961be27d88.jpeg

– ஹேக்கர்கள் பயனர் அனுப்பும் பதிலை மாற்ற முடியும். ஒருவர் தெரிவிக்காத தகவல்களை, தெரிவித்ததாக மாற்றியமைக்க முடியும்.

– க்ரூப்-யில்  இருக்கும் ஒருவர் அனுப்பியதாக தகவல் ஒன்றை அனுப்ப முடியும். இது க்ரூப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட பயனர் அனுப்பியதாகவே தெரியும்.

– தனிப்பட்ட உரையாடல் ஒன்றை க்ரூப் சாட்டில் காண்பிக்க செய்ய முடியும். 

புதிய பிழை குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் தரப்பில் இதுவரை பதில் வழங்கப்படவில்லை என செக் பாயின்ட் தெரிவித்துள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo