வாட்ஸ்அப் செயலியில் டெலீட் மெசேஜஸ் அம்சம் வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.83 மற்றும் 2.20.84 வெர்ஷன்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் டெலீட் மெசேஜஸ் அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விரைவில் இது வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அம்சத்தினை செயல்படுத்தினால் இது சாட்களில் உள்ள குறுந்தகவல்களை அழித்துவிடும். இந்த அம்சம் தானாக டிசேபிள் செய்யப்பட்டு இருக்கும் மேலும் இது பிரைவேட் சாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய அம்சம் பற்றி வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் குறுந்தகவல் அனுப்புவோர், எத்தனை நிமிடங்களுக்கு பின் குறுந்தகவல் அழிய வேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும். இதற்கு பயனர்கள் ஒரு மணி நேரத்தில் துவங்கி, 1 வாரம், 1 மாதம் மற்றும் 1 வருடம் வரை செலக்ட் செய்து கொள்ளலாம்.