whatApp யில் புதிய CRICKET STICKERS PACK, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.எப்படி டவுன்லோடு செய்வது

Updated on 01-May-2019
HIGHLIGHTS

வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் நடைபெறும் இந்திய பிரீமியர் லீக் (IPL ) கிரிக்கெட் தொடர் சார்ந்த சிறப்பு ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் நடைபெறும் இந்திய பிரீமியர் லீக் (IPL ) கிரிக்கெட் தொடர் சார்ந்த சிறப்பு ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

வாட்ஸ்அப் ஸ்டிக்கர் கொண்டு பயனர்கள் தங்களது கருத்துக்களை புது வழிகளில் வெளிப்படுத்த முடியும். வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றை டவுன்லோடு செய்தபின் பயனர்கள் அவற்றை வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு அனுப்ப முடியும்.

ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு அதிகாரப்பூர்வ கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது. விரைவில் ஐபோன் பயனர்களுக்கும் இந்த ஸ்டிக்கர்கள் வழங்கப்பட இருக்கிறது. புதிய கிரிக்கெட் ஸ்டிக்கர்களை பயனர்கள் அவரவர் விரும்பும் கிரிக்கெட் ப்ரியர்களுக்கு அனுப்பி மகிழலாம்.

வாட்ஸ்அப் கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இவற்றை பயனர்கள் ஸ்டிக்கர் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த பேக்களில் கிரிக்கெட் சார்ந்த பல்வேறு ஸ்டிக்கர்கள் இடம்பெற்றிருக்கும். புதிய ஸ்டிக்கர்கள் சர்வெர் சார்ந்த அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. இவை வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.19.115 பதிப்பில் பெறலாம்.

கிரிக்கெட்  ஸ்டிக்கர்களை  எப்படி டவுன்லோடு  செய்வது.

  • வாட்ஸ்அப்  ஆப் யில் சென்று மற்றும் அதி திறக்கவும்.
  • ஏதாவது ஒரு  Chat திறக்க வேண்டும்.
  • உங்கள் மெசேஜை டைப்  செய்த பிறகு அருகில் கொடுக்கப்பட்ட ஈமோஜியில்  க்ளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று  ஆப்சன் (Emoji, Gifs, Stickers) யில் இருக்கும் ஸ்டிக்கர்  ஒப்சனில் செல்ல வேண்டும்.
  • மேலே கொடுக்கப்பட்டுள்ள வாடாது பக்கத்தில் இருக்கும் +' சைனில்  க்ளிக் செய்ய வேண்டும்
  • இப்பொழுது  கிரிக்கெட் பேக்  ஸ்டிக்கர்கள் பேக்லிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அதை டவுன்லோடு செய்யலாம்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :