வாட்ஸ்அப்பில் இருக்கும் 5 பிரைவசி அப்டேட்கள்.

வாட்ஸ்அப்பில்  இருக்கும் 5 பிரைவசி  அப்டேட்கள்.

வாட்ஸ்ஆப் தற்போது வாடிக்கையாளர்களுக்கு  பல புதிய அப்டேட்கள் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.அந்த வகையில் whatsapp  மீண்டும் பயனர்களின்  நலம் கருதி பல புதிய பிரைவசி அம்சங்களை கொண்டு வந்துள்ளது நம்முடைய ஸ்மார்ட்போன் யார் வேண்டுமானாலும், நம்மிடமிருந்து வாங்கி செல்வார்கள் நாம்  ஒவ்வொன்றுக்காக லோக் போடுவது என்பது சற்று கடினமான விஷயம் தான் அத்தகைய பிரச்சினைகளை மனதில் வைத்து தற்பொழுது வாட்ஸ்அப் நிறுவனம் பல பிரைவசி அம்சங்களை அறிவித்துள்ளது அவை என்ன வாருங்கள் பார்க்கலாம்.

Facebook Story integration
தற்போது வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக்கிலும் ஷேர் செய்யும் வசதி வந்துள்ளது. வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பக்கத்தில் ஃபேஸ்புக் ஸ்டோரியாக ஷேர் செய்வதற்கான ஆப்சன் தற்போது வந்துள்ளது.
Frequently forwarded
5க்கும் மேற்பட்ட முறை பகிரப்படும் செய்திகள் Frequently forwarded என்ற டேக்குடன் மற்றவர்களுக்கு சென்று சேரும். அளவுக்கு அதிகமாக ஷேர் செய்யப்பட்டால் அவை ஸ்பேம் மெசேஜாகவும் இருக்கலாம் என்று வாடிக்கையாளர்கள் அறிய வசதியாக இருக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

Fingerprint unlock
வாட்ஸ்ஆப் ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் சிறப்பம்சங்கள் ஆப்பிளின் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ் அன்லாக் மூலமாகவும் வாட்ஸ்ஆப்பை செயல்படுத்த முயலும். ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் ஃபீச்சர் எனேபில் செய்த பின்பு வாடிக்கையாளர்கள் தங்களின் நோட்டிஃபிகேசனில் வரும் கண்டெண்ட்டுகளை மறைக்கவும் முடியும்.

Group invitation
உங்களின் விருப்பம் இல்லாமல் உங்களை இனி யாராலும் வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இணைக்க இயலாது. இதற்கான செட்டிங்க்ஸ்லில் நோபடியை தேர்வு செய்தால், யாரும் உங்களை எந்த க்ரூப்பிலும் இணைக்க இயலாது. அந்த இன்விடேசன் ரெக்வஸ்ட்டும் மூன்றே நாட்களில் காலாவதி ஆகிவிடும். மை காண்டாக்ட்ஸ் என்றால், உங்கள் காண்டாக்ட்டில் இருக்கும் நபர்கள் உங்களை க்ரூப்பில் இணைக்க இயலும்.

Consecutive voice messages
ஒருவர் அனுப்பிய ஒலிக்குறுஞ்செய்திகளை தொடர்ச்சியாக கேட்கும் வசதியை இந்த அப்டேட் உங்களுக்கு தரும். எனவே நீங்கள் ஒவ்வொரு மெசேஜ்ஜையும் ப்ளே செய்து கேட்க வேண்டிய அவசியம் இருக்காது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo