WhatsApp யில் இப்பொழுது iOS பயனர்களும் ஹை குவாலிட்டி போட்டோ வீடியோ அனுப்ப முடியும்

WhatsApp யில் இப்பொழுது iOS பயனர்களும் ஹை குவாலிட்டி போட்டோ வீடியோ அனுப்ப முடியும்
HIGHLIGHTS

WhatsApp யின் பீட்டா வெர்சன் பயன்படுத்தும் சோதனையாளர்கள் சில காலமாக HD தரத்தில் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து மகிழ்கின்றனர்

WABetaInfo யின் சமீபத்திய அறிக்கையின்படி, WhatsApp ஆனது புதிய நிலையான புதுப்பிப்பை ஆப் ஸ்டோரில் (பில்ட் நம்பர் 23.24.73) சமர்ப்பித்துள்ளது

இது பயனர்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அசல் தரத்தில் ஆவணங்களாக எளிதாக அனுப்ப அனுமதிக்கிறது

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் WhatsApp யின் பீட்டா வெர்சன் பயன்படுத்தும் சோதனையாளர்கள் சில காலமாக HD தரத்தில் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து மகிழ்கின்றனர். இந்த அம்சத்தில், பயனர்கள் போட்டோக்கள் அல்லது வீடியோக்களை அனுப்பும் போது சிறப்பு ‘HD’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உயர்தரத்தில் அனுப்பலாம்.

இந்த அம்சம் இன்னும் iOS பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும், WhatsApp அம்சங்கள் கண்காணிப்பாளரின் படி, iOS யில் WhatsApp ஐப் பயன்படுத்தும் பயனர்கள் விரைவில் அசல் தரத்தில் போட்டோக்கள் அல்லது வீடியோக்களை ஆவணங்களாக அனுப்ப முடியும்.

WABetaInfo யின் சமீபத்திய அறிக்கையின்படி, WhatsApp ஆனது புதிய நிலையான புதுப்பிப்பை ஆப் ஸ்டோரில் (பில்ட் நம்பர் 23.24.73) சமர்ப்பித்துள்ளது, இது பயனர்கள் போட்டோக்கள் ம ற்றும் வீடியோக்களை அசல் தரத்தில் ஆவணங்களாக எளிதாக அனுப்ப அனுமதிக்கிறது. இதன் பொருள் iOS பயனர்கள் ஆப்பின் மூலம் ஷேர் செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அவற்றின் அசல் தரத்தில் இருக்கும், இதனால் பெறுநருக்கு மோசமான தரம் அல்லது அதிக சுருக்கப்பட்ட பைல் கிடைக்காது.

டிராக்கரின் படி இந்த அம்சத்தைப் பயன்படுத்த, ஷேர் ஷீட்டில் உள்ள டாக்யுமென்ட் ஆப்சனை தேர்ந்தெடுத்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களைப் ஷேர் செய்ய வேண்டும். மேலும், இந்த அம்சம் வெளிவரத் தொடங்கியுள்ளது என்றும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் எந்த iOS பயனரும் இன்ச்டன்டாக ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த அம்சம் சமீபத்திய பதிப்பு 23.24.73 யில் கிடைக்கிறது.

இருப்பினும், ஒரிஜினல் குவாலிட்டியில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களைப் ஷேர் செய்ய உங்கள் மாதாந்திரத் திட்டத்தை விட அதிக டேட்டாவைச் செலவழிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இது குறிப்பாக வீடியோ பைல்களில் நடக்கும். அத்தகைய சூழ்நிலையில், மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தும் போது நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க OnePlus 12 டாப் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்

இது தவிர, இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் மற்றொரு விருப்ப அம்சத்தில் செயல்படுகிறது , இது பயனர்களை இன்ஸ்டாகிராமில் நேரடியாக வாட்ஸ்அப் ஸ்டேட்டசை ஷேர் செய்ய அனுமதிக்கும். இது கூகுள் பிளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா v2.23.25.20 யில் காணப்பட்டது. இந்த தளம் ஏற்கனவே பயனர்களுக்கு பேஸ்புக்கில் வாட்ஸ்அப் ஸ்டேட்டசை ஷேர் செய்யும் விருப்பத்தை வழங்குகிறது. புதிய அம்சமும் இதே போன்றதாக இருக்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo