WhatsApp யில் வருகிறது சூப்பர் அம்சம், இனி இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்த முடியும்

WhatsApp யில் வருகிறது சூப்பர் அம்சம், இனி இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்த முடியும்
HIGHLIGHTS

இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான WhatsApp தொடர்ந்து புதிய அம்சங்களை பயனர்களுக்கு கொண்டு வருகிறது

சில மாதங்களுக்கு முன்பு, வாட்ஸ்அப் ஒரு அம்சத்தில் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது,

பயனர்கள் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமல் பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்

மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான WhatsApp தொடர்ந்து புதிய அம்சங்களை பயனர்களுக்கு கொண்டு வருகிறது , சில மாதங்களுக்கு முன்பு, வாட்ஸ்அப் ஒரு அம்சத்தில் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது, இதன் உதவியுடன் பயனர்கள் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமல் பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும், இது ஆப்பிளின் ஏர் டிராப் போன்றது. இந்த அம்சம் அப்போது ஆண்ட்ராய்டு OS க்காக சோதிக்கப்பட்டாலும், ஐபோன் பயனர்களுக்கும் இது வளர்ச்சியில் இருப்பதாகத் தெரிகிறது.

WABetaInfo யின் புதிய அறிக்கையின் படி iOS வெர்சனில் யில் லேட்டஸ்ட் WhatsApp பீட்டா வெர்சனில் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது, இன்டர்நெட் கனெக்சன் இல்லாமல், அருகிலுள்ள பிற பயனர்களுடன் பைல்களை வேகமாக ஷேர் செய்ய இது பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட இணைப்பைப் பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் அருகிலுள்ளவர்களுடன் போட்டோக்கள் , வீடியோக்கள் மற்றும் டாக்யுமென்ட்களை பகிரலாம்.

இருப்பினும், இந்த புதிய கோப்பு பகிர்வு அம்சத்தின் ஆண்ட்ராய்டு பதிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை மற்றும் வாட்ஸ்அப் தற்போது இரண்டு தளங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலான பீட்டா பயனர்களுடன் சோதனை செய்து வருகிறது. WABetaInfo இன் அறிக்கையில் ஸ்கிரீன் ஷாட் உள்ளது, இந்த கோப்பு பகிர்வு அம்சம் ‘அருகில் உள்ள ஷேரிங் என்று பெயரிடப்பட்டுள்ளது.

WhatsApp File Sharing அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?

இந்த அம்சத்தைப் பயன்படுத்த, அனுப்புநர் வாட்ஸ்அப்பில் QR கோடை உருவாக்க வேண்டும். பின்னர் பெறுநர் அதை ஸ்கேன் செய்ய வேண்டும், அதன் பிறகு இரண்டு டிவைஸ் இணைக்கப்படும். இந்த செயல்முறைக்குப் பிறகு, பயனர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பைல்களை ஷேர் செய்ய முடியும். இருப்பினும், Android ஆப் யில் உள்ள இந்த அம்சத்திற்கு, பில் ஷேரிங் பகிர்வு கோரிக்கைகளை ஏற்க பயனர்கள் அருகிலுள்ள டிவைஸ்களை தேட வேண்டும்.

இந்த அம்சத்தின் நிரந்தர வெளியீடு குறித்து தற்போது அதிகாரப்பூர்வ வார்த்தை எதுவும் இல்லை, ஆனால் இது இன்னும் ஆரம்ப வளர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் இரு தளங்களிலும் உள்ள நிரந்தர ஆப்களில் இதைப் பார்க்க சிறிது நேரம் ஆகலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo