WhatsApp Web யில் வருகிறது அசத்தலான அம்சம் இனி யாருக்கும் நம்பரை காமிக்க தேவை இல்லை

Updated on 02-Jan-2024
HIGHLIGHTS

வாட்ஸ்அப் வெப் யில் முன்பை விட இந்த அம்சம் பயனருக்கு அதிக ப்ரைவசியை வழங்கும்.

வாட்ஸ்அப் வேப்சைட்டுடன் இணைக்க பயனர்கள் தங்கள் போன் நம்பரை வழங்க வேண்டியதில்லை

பயனர் பெயர் username மூலம் மட்டுமே மற்ற பயனர்களைக் கண்டறிய முடியும்.

பயனர்கள் முன்பை விட அதிக ப்ரைவசியை பெறும் புதிய அம்சத்தில் WhatsApp செயல்படுவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் வெப் யில் முன்பை விட இந்த அம்சம் பயனருக்கு அதிக ப்ரைவசியை வழங்கும். அதன் வருகைக்குப் பிறகு, வாட்ஸ்அப் வேப்சைட்டுடன் இணைக்க பயனர்கள் தங்கள் போன் நம்பரை வழங்க வேண்டியதில்லை. மாறாக, பயனர் பெயர் username மூலம் மட்டுமே மற்ற பயனர்களைக் கண்டறிய முடியும். ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சம் கொண்டு வரப்படும் என முன்னதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது வெப் எடிசனில் கொண்டு வருவதற்கான பேச்சு எழுந்துள்ளது.

WhatsApp யின் இந்த அப்கம்மிங் அம்சம் பற்றி WABetaInfo வெளியிட்டுள்ளது, வெப் கிளையன்ட் இப்போது யூசர் நேம் மூலம் மட்டுமே காண்டேக்டுடன் இணைக்க முடியும். வெப் எடிசனினில் இணைக்க, பயனர் தனது போன் நம்பரை மற்ற பயனர்களுக்குச் சொல்ல வேண்டும். ஆனால் புதிய அம்சத்தின் வருகைக்குப் பிறகு, பயனர்கள் தங்கள் நம்பரை வெளிப்படுத்த கட்டாயப்படுத்தாமல் மற்ற பயனர்களுடன் இணைக்க முடியும். அதாவது, உங்கள் போன் நம்பரை யாரிடமும் சொல்ல விரும்பவில்லை என்றால், அது இல்லாமல் கூட நீங்கள் மெசேஜ் பிளாட்பார்மில் இணைக்க முடியும்.

#Whatsapp web

யூசர்நேம் அடிப்படையிலான ப்ரைவசியை அதிகரிக்கிறது இதனுடன் உங்களுக்கு கூடுதல் பாதகாப்பு கிடைத்துவிடும் இதை தவிர யூசர் தனிப்பட்ட எந்த தகவலையும் தர வேண்டியதில்லை, டிராக்கிங் பிளாட்பார்ம் இந்த வளரும் அம்சத்தின் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளது. மற்ற அப்டேட்களை பற்றி பேசுகையில், வாட்ஸ்அப் வீடியோ காலின் போது பயன்படுத்தக்கூடிய அம்சத்தையும் சேர்க்கப் போகிறது.

இதையும் படிங்க: Realme இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்

சமிபத்திய அறிக்கையின் படி WhatsApp மற்றொரு அம்சத்தை கொண்டு வருவதாக தகவல் வெளியானது, இதன் மூலம் வீடியோ காலின் போது வீடியோ மற்றும் இசை ஆடியோவைப் ஷேர் செய்யலாம், இருப்பினும், மற்றொரு பயனர் தனது ஸ்க்ரீனை பகிரும்போது இது நடக்கும். நீண்ட விவாதத்தின் போது மல்டிமீடியா கண்டெண்டை பகிர்வதன் இதன் மூலம் மகிழ்விக்க விரும்புபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். ஸ்க்ரீன் ஷேரிங் செய்யும்போது நிகழ்நேரத்தில் வீடியோ மற்றும் ம்யுசிக் ஆடியோவைப் பகிரும் திறன் பிளாட்பார்மில் காண்டேக்ட்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :