WhatsApp யில் வருகிறது செம்ம அம்சம் இனி சர்ச் செய்வது ஆகும் செம்ம ஈசி

WhatsApp யில் வருகிறது செம்ம அம்சம் இனி சர்ச் செய்வது ஆகும் செம்ம ஈசி
HIGHLIGHTS

மெட்டாவின் மெசேஜ் தளமான WhatsApp புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது,

இது ஆப் யின் சர்ச் திறனை மேம்படுத்துகிறது

இப்போது பயனர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியின் அடிப்படையில் மெசேஜ்களை சர்ச் செய்யலாம்.

மெட்டாவின் மெசேஜ் தளமான WhatsApp புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஆப் யின் சர்ச் திறனை மேம்படுத்துகிறது. சமீபத்திய அம்சம் பயனர்களுக்கு சேட் ஹிஸ்ட்ரியின் டெக்ஸ்ட் போன்றவற்றைத் தேடுவதற்கு முன்பை விட அதிக வசதியை வழங்குகிறது. இப்போது பயனர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியின் அடிப்படையில் மெசேஜ்களை சர்ச் செய்யலாம்.

WhatsApp யின் search by date அம்சம்

Meta CEO Mark Zuckerberg தனது WhatsApp சேனலில் இந்த அம்சத்தை அறிவித்தார். ஆண்ட்ராய்டு, IOS மேக், விண்டோஸ் மற்றும் வெப் ஆகியவற்றில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ‘தேதி மூலம் தேடு’ அம்சம் உலகளவில் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. இது நவம்பர் 2023 இல் பீட்டா டெஸ்டிங்கில் காணப்பட்டது.

WhatsApp யில் ‘Search by Date’அம்சம் பயன்படுத்த, பயனர்கள் தனிப்பட்ட அல்லது க்ரூப் சேட்டை திறக்க வேண்டும், அதில் அவர்கள் மெசேஜை தேட விரும்புகிறார்கள். இதற்குப் பிறகு, அவர்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்ட வேண்டும் அல்லது iOS போன்களில் கான்டேக்ட் அல்லது க்ரூப்பின் பெயரைத் தட்ட வேண்டும். ஆப்ஸ் சமீபத்திய கிடைக்கக்கூடிய அப்டேட்டிற்கு புதுப்பிக்கப்பட்டால், வழக்கமான சர்ச் விருப்பத்தைக் கிளிக் செய்த பிறகு, சர்ச் ஐகானுடன் சிறிய காலெண்டரைப் பார்ப்பார்கள். ஒரு பாப்-அப் காலெண்டர் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான தேதியைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும், அது அந்தத் தேதியில் அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட மெசேஜ்களை காண்பிக்கும்.

உதரணமாக அவர்கள் அக்டோபர் 20, 2023 முதல் ஒரு மெசேஜ் பார்க்க விரும்பினால், அவர்கள் பாப்-அப் காலெண்டரில் தேதி, மாதம் மற்றும் ஆண்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம். ஒரு தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதும், சேட் அல்லது க்ரூப் அந்த நாளுக்கான மெசேஜ்களை நேரடியாகக் காண்பிக்கும், அதிலிருந்து பயனர்கள் மேலே அல்லது கீழ்நோக்கிச் செல்லலாம். இந்த அம்சம் இல்லாமல், பயனர்கள் டெக்ஸ்டை அணுகுவதற்கு முந்தைய மாதங்களில் இருந்து மெசேஜ்களை ஸ்க்ரோல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையும் படிங்க:March 2024: OTT யில் வர இருக்கும் படம் இந்த Weak end மகிழ்லாம்

இந்த டேட்டா search by date அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?

  • முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது Apple ஆப் ஸ்டோரில் உங்களின் whatsApp முதலில் அப்டேட் செய்ய வேண்டும்.
  • உங்களின் தனிப்பட்ட அல்லது க்ரூப் சேட் திறக்க வேண்டும்.
  • மேலே வலது மூலையில் மூன்று டாட்ஸ் இருக்கும் அதை ஆண்ட்ரோய்ட் பயனர்கள் க்ளிக் செய்யலாம் IOS சேட் பயனர்களுக்கு மேலே சர்ச் ஒப்ஷன் வரும்.
  • மேலே சர்ச் பாரில் ரைட் சைடில் Calender icon தெரியும் அதை தொட வேண்டும்.
  • அதில் Calender திறந்து எந்த தேதியில் இருக்கும் சேட் சர்ச் செய்ய விரும்புகிர்ர்களோ அந்த date போடவும்.
  • நீங்கள் எந்த தேதி போட்டு இருக்கிங்களோ அந்த தேதியில் இருக்கும் அத்தனை சேட்டையும் WhatsApp ஆடோமேட்டிகாக ஸ்க்ரோல் செய்து டேட்டாவை காமிக்கும்.
  • இதை தவிர நீங்கள் எதை சர்ச் செய்ய விரும்புகிறிர்களோ அந்த சேட் டெக்ஸ்ட் போட்டு தேடலாம்.
  • குறிப்பு: இந்த அம்சம் படிப்படியாக வெளிவருகிறது மேலும் சிறிது நேரம் ஆகலாம்
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo