New Year மஜாவான அம்சத்தை வெளியிட்ட WhatsApp

New Year மஜாவான அம்சத்தை வெளியிட்ட WhatsApp

WhatsApp New Year இந்த புதிய வருடம் 2025 ஆண்டை முன்னிட்டு மெசேஜிங் அனுபவத்தை எளிதாகவும் சிறப்பனதாக ஆக்க ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது, புத்தாண்டு காலிங் எபக்ட், ஸ்டிக்கர் பேக் போன்ற பல விஷயங்கள் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகளவில், புத்தாண்டில் பில்லியன் கணக்கான மெசேஜ்கள் பரிமாறப்படுகின்றன. மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்புகிறார்கள் மற்றும் Whatsapp இதில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, மெசேஜ் தளம் புதிய ஸ்டிக்கர்கள் மற்றும் எபக்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

WhatsApp New Year புதிய அம்சம்

  • NYE காலிங் எபக்ட்:-NYE காலிங் எபக்ட்களில் நோட்டிபிகேசனுடன் , பயனர்கள் இப்போது தங்கள் வீடியோ கால்களில் பண்டிகை பேக்ரவுண்ட் , பில்ட்டர் மற்றும் எபக்ட்களை சேர்க்கலாம்.
  • Animated Reactions: இப்போது ஈமோஜியுடன் செய்திகளுக்கு எதிர்வினையாற்றுவது, அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இருவருக்கும் தெரியும் ஒரு கான்ஃபெட்டி அனிமேஷனைத் (“confetti animation”)தூண்டுகிறது, மேலும் வேடிக்கையான அனுபவத்தைச் சேர்க்கிறது.
  • NYE Stickers:- இந்த புதிய ஸ்டிக்கர் பேக் மற்றும் அவதார் ஸ்டிக்கர் இந்த புத்தாண்டில் கிடைக்கும்.

இந்த புதிய ஸ்டிக்கர் அம்சம் டிசம்பர் 20 லிருந்து ஜனவரி 3, 2025 வரையிலான பயனர்கள் லேட்டஸ்ட் ஆப் வெர்சன் மற்றும் அப்டேட்டை இந்த பண்டிகை காலத்தில் பெறலாம்.

WhatsApp யின் புதிய காலிங் அம்சம்.

சமீபத்தில் நிறுவனம் வீடியோ கால்களில் நாய்க்குட்டி காதுகள், கரோக்கி மைக் மற்றும் நீருக்கடியில் தீம் போன்ற புதிய அபக்ட்களை சேர்த்தது. பயனர்கள் இப்போது பத்து வெவ்வேறு எபக்ட்களை இங்கே பெறலாம். மேலும், க்ரூப் கால்களுக்கும் பயனர்கள் குறிப்பிட்ட பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதாவது க்ரூப் வீடியோ காலில் முழு சேட்டையும் தொந்தரவு செய்யும் பிரச்சனையை நிறுவனம் தற்போது நீக்கியுள்ளது. வாட்ஸ்அப் இயங்குதளத்தில் அவ்வப்போது புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. புத்தாண்டு அன்று, நிறுவனம் புதிய ஸ்டிக்கர்களை பயனர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:WhatsApp யில் பரவும் புதிய ஸ்கேம் எச்சரிக்கை மக்களே இலவச லேப்டாப் வழங்குவதாக பரவும் மெசேஜ்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo