WhatsApp Group காலில் புதிய அம்சம் இப்பொழுது 31 பேருக்கு கால் செய்யலாம்
வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தைத் தொடங்கியுள்ளது,
இது ஒரே நேரத்தில் அதிகபட்சம் 31 பேரை ஒரே நேரத்தில் அழைக்க அனுமதிக்கிறது
இந்த வசதி இதன் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது க்ரூப் கால் அனுபவத்தை மிகவும் வேடிக்கையாக மாற்றும் என்று நிறுவனம் கூறுகிறது. அறிக்கையின்படி, வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தைத் தொடங்கியுள்ளது, இது ஒரே நேரத்தில் அதிகபட்சம் 31 பேரை ஒரே நேரத்தில் அழைக்க அனுமதிக்கிறது. WABteaInfo யின் அறிக்கையின்படி, இதற்காக வாட்ஸ்அப் கால் டேப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 31 பயனாளர்களுக்கு ஒரே நேரத்தில் கால்களை மேற்கொள்ளும் வசதியை வழங்கும். இந்த வசதி இதன் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட் வெளியாகியுள்ளது. அப்டேட் செய்யப்பட வெர்சன் 2.23.19.16 யில் இதை அணுகலாம்.
எப்படி எண்ணிகையை அதிகரிக்கும்.
இதுவரை வாட்ஸ்அப் பயனர்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 15 பேருடன் க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும் அதற்கு முன் இந்த நம்பர் 7 ஆக இருந்தது. ஆனால் தற்போது அது 31 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு பெரிய நண்பர்கள் க்ரூப் ஒரே நேரத்தில் ஆன்லைன் வீடியோ காலிங் மூலம் ஒன்றாக இணைக்க முடியும். மாற்றங்களைப் பற்றி பேசினால், பிளஸ் ஐகானுடன் மிதக்கும் செயல் பட்டன் WhatsApp அப்டேட் செய்துள்ளது
Group காலிங் whatsapp அம்சம்
க்ரூப் காலிங் அம்சத்தின் மூலம் 32 பேர் whatsApp குரூப் வொயிஸ் காலில் சேரலாம் ஆனால் இதற்க்கு லேட்டஸ்ட் வெர்சன் இருக்க வேண்டும். இருப்பினும் முதலில் இது இதன் லிமிட் 15 காண்டேக்ட்ஸ் ஆக இருந்தது
இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் இது 7 லிருந்து 15 ஆக மாறியது மற்றும் தற்பொழுது இந்த க்ரூப்காலில் 15 பேர் சேர முடியும்.
அறிக்கையின்படி, கால்களின் டேப்பில் சிறிய மாற்றங்களுடன் 31 பேரின் க்ரூப் கால் அம்சம் தற்போது ஆண்ட்ராய்டில் லிமிடெட் பீட்டா சோதனையாளர்களுக்குக் கிடைக்கிறது.
இதனுடன் 31 பேர் கொண்ட க்ரூப் கால் அம்சத்துடன், WhatsApp இப்போது கால்கள் டேபுக்கு திருத்தப்பட்ட இன்டர்பேஸ் வெளியிடுகிறது. "சமீபத்திய அப்டேட்களுடன் இதே போன்ற மேம்பாடுகளைச் சேர்ப்பதன் மூலம் வாட்ஸ்அப் கால்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகத் தெரிகிறது" என்று அறிக்கை கூறியது.
வாட்ஸ்அப் புதிய வீடியோ அவதார் காலிங் அம்சத்தை சோதனை செய்யத் தொடங்கியுள்ளதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. இந்த அம்சத்தின் மூலம், வீடியோ கால்களில் போது பயனர்கள் தங்கள் அவதார் மூலம் தங்களை மாற்றிக் கொள்ள முடியும்.
வாட்ஸ்அப் என்பது மெட்டாவுக்குச் சொந்தமான ஒரு தளம் என்பதால், ஜூலை மாதத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சருக்கான நிகழ்நேர அவதார் காலிங் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வாட்ஸ்அப் காலப்போக்கில் இதுபோன்ற அம்சங்களை சேர்க்கலாம் என்று கூறப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile