வாட்ஸ்ப் ஐ.ஒ.எஸ். பதிப்புகளுக்கு புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் புதிய 2.19.120 வெர்ஷனில் கால் வெய்ட்டிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் அழைப்புகளில் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தாலும், புதிய அழைப்பை ஏற்க முடியும்.
முன்னதாக இம்மாத துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரைவசி செட்டிங்களை வாட்ஸ்அப் வழங்கியது.புதிய ஐ.ஒ.எஸ். அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் புதிய சாட் ஸ்கிரீன், பிரெய்லி (கண் பார்வையற்றோர் பயன்படுத்தும் எழுத்துமுறை ) கீபோர்டு வசதியை வழங்கி இருக்கிறது.
IOS தளத்திற்கான 2.19.120 வாட்ஸ்அப் அப்டேட் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆப் ஸ்டோர் சென்று தங்களின் செயலியை அப்டேட் செய்து கொள்ள முடியும். ஏற்கனவே குறிப்பிட்டு இருப்பதை போன்று புதிய அப்டேட் கால் வெயிட்டிங் வசதியை வழங்குகிறது.
இதுதவிர புதிய அப்டேட் புதிய வடிவமைப்பு கொண்ட சாட் ஸ்கிரீனை வழங்குகிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் குறுந்தகவல்களை வேகமாக பார்க்க முடியும். இவற்றுடன் குறுந்தகவல்களை பிரெய்லி மோடில் வாய்ஸ்ஓவர் மோட் பயன்படுத்தி நேரடியாக அனுப்ப முடியும்.
இந்த அம்சம் பீட்டா சோதனைகளில் சிக்காமல், நேரடியாக ஸ்டேபில் அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. கால் வெயிட்டிங் அம்சம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் அழைப்பில் இருக்கும் போது, அவர்களுக்கு வரும் இன்கமிங் அழைப்புகளை அறிந்து கொள்ள வழி செய்யும். இதனால் வாடிக்கையாளர்கள் அழைப்பை ஏற்பதும், பின்னர் அழைப்பது பற்றி முடிவெடுத்துக் கொள்ளலாம்.
புதிய அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டும்.