வாட்ஸ்அப்பில் புஷ் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தே பிரீவியூ செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
IOS தளத்துக்கான வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை புஷ் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தே பிரீவியூ செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. ஏற்கனவே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நோட்டிஃபிகேஷன்களை பிரீவியூ செய்யும் வசதி ஏற்கனலவே வழங்கப்படுகிறது.
அதன்படி பிளே பட்டன் கொண்ட வாய்ஸ் மெசேஜ் காணப்படுகிறது. இந்த அம்சம் பெரிய அப்டேட் வடிவில் மற்ற அம்சங்களுடன் சேர்த்தே வெளியிடப்படும் என கூறப்படுகிறது. ஐ.ஒ.எஸ். தளத்தில் டார்க் மோட் அம்சம் செப்டம்பரில் எதிர்பார்க்கப்படும் ஐ.ஒ.எஸ். 13 அப்டேட்டில் வழங்கப்படும் என தெரிகிறது.
அந்த வரிசையில் புகைப்படம், வீடியோக்களுடன் வாய்ஸ் மெசேஜ்களும் சேர்ந்து இருக்கிறது. இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இந்த அம்சம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் ஐபோன்களில் நோட்டிஃபிகேஷன் சென்டரில் இருந்து நேரடியாக ஸ்டிக்கர்களை பிரீவியூ செய்யும் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது. பயனர்கள் நோட்டிஃபிகேஷனை அழுத்திப்பிடித்து ஸ்டிக்கர்களை முழுமையாக பார்த்து ரசிக்க முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile