வாட்ஸ்அப் IOS .இல் புதிய பாதுகாப்பு அம்சம்

Updated on 05-Feb-2019
HIGHLIGHTS

புதிய அம்சம் செயலியை பயோமெட்ரிக் முறையில் லாக் செய்து கொள்ளும்.

வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். பதிப்பின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் ஆப்பிளின் டச் ஐ.டி. மற்றும் ஃபேஸ் ஐ.டி. வசதி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் செயலியை பயோமெட்ரிக் முறையில் லாக் செய்து கொள்ளும்.

எனினும், வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் மற்றும் அவற்றுக்கான க்விக் ரிப்ளை ஆப்ஷன்களை தொடர்ந்து பார்க்க முடியும். வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தின் நோட்டிபிகேஷனில் க்விக் ரிப்ளை வசதி வழங்கப்பட்டிருந்தாலும், செயலியை முழுமையாக பயன்படுத்த பயோமெட்ரிக் முறையை கடக்க வேண்டியது அவசியமாகும்.  

புதிய பயோமெட்ரிக் பாதுகாப்பை செயல்படுத்த வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று செட்டிங்ஸ் — அக்கவுண்ட் — பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

புதிய பாதுகாப்பு வசதி பற்றி ஆப்ஸ்டோரில் எழுதப்பட்டிருப்பதாவது: வாட்ஸ்அப் ஆப் அன்லாக் செய்ய ஃபேஸ் ஐ.டி. அல்லது டச் ஐ.டி. உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். இதற்கு செட்டிங்ஸ் – – அக்கவுண்ட் — பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களுக்கு சென்று ஸ்கிரீன் லாக் வசதியை செயல்படுத்த வேண்டும்.

முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களை 2020 ஆம் ஆண்டிற்குள் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வசதியை கொண்டு மூன்று செயலிகளுக்கு இடையே பயனர்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :