இனி உங்கள் வாட்ஸ்அப்பை மேலும் பாதுகாப்பாக வைக்க புதிய வசதி.
வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. புது அம்சங்கள் சோதனை செய்வது வாடிக்கையான விஷயம் தான் என்ற போதும், சமயங்களில் சில அம்சங்கள் அனைவரும் அதிகம் எதிர்பார்த்திருக்கும் போது இவை சற்று முக்கியத்துவம் பெறுகின்றன.
வாட்ஸ்அப் பீட்டா 2.12.221 பதிப்பை பயன்படுத்துவோருக்கு புதிய பாதுகாப்பும் அம்சம் வழங்கப்படுகிறது. பீட்டா பதிப்பை பயன்படுத்துவோர் செயலியை அப்டேட் செய்து புதிய அம்சத்தை பயன்படுத்தி பார்க்க முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சாட்களை கைரேகை லாக் மூலம் பாதுகாக்கும் வசதி சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டாவில் சோதனை செய்யப்பட்ட இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு பதிப்பிலும் சோதனை செய்யப்படுகிறது.
வாட்ஸ்அப் கைரேகை லாக்
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பதிப்பில் கைரேகை லாக் வசதியை செயல்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்ஸ் – அக்கவுண்ட் – பிரைவசி ஆப்ஷன்களை தேர்வு செய்யவும்
இதில் புதிதாக கைரேகை லாக் (Fingerprint lock) அம்சம் பிரைவசி பிரிவில் தெரியும்
இனி ‘Unlock with fingerprint’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
புதிய அம்சம் தேர்வு செய்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்
செயலியை திறந்து அதனை பயன்படுத்த வாட்ஸ்அப் மூன்று ஆப்ஷன்களை வழங்குகிறது. இவை தானாக லாக் செய்வது (Automatically lock), உடனடியாக லாக் செய்வது (Immediately), ஒரு நிமிடத்திற்கு பின் (After 1 minute) மற்றும் முப்பது நிமிடங்களுக்கு பின் (After 30 minutes) போன்றவை தெரியும்.
கைரேகை லாக் அம்சம் செயல்படுத்தப்பட்டிருக்கும் போது, நோட்டிஃபிகேஷன்களில் தரவுகளை தோன்ற செய்வது மற்றும் மறைத்து வைப்பதற்கு வாட்ஸ்அப் வழி செய்கிறது. இதனை Show content in notifications பகுதியில் இயக்க முடியும்.
கைரேகை லாக் அம்சம் ஆன் செய்யப்பட்டிருந்தால், விட்ஜெட் தானாக மறைக்கப்பட்டு விடும். எனினும், பயனர்கள் வாட்ஸ்அப் அழைப்புகளை ஏற்கவும், நோட்டிஃபிகேஷன்களில் இருந்து குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும். செயலியை பயன்படுத்த திறக்கும் போது மட்டும் கைரேகை தேவைப்படும்.
இந்த அம்சம் படிப்படியாக ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile