வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் புதிய அப்டேட்.

Updated on 03-Apr-2020
HIGHLIGHTS

லாக் இன் செய்வது மற்றும் ஸ்டேட்டஸ் வீடியோ அளவை குறைப்பது போன்ற மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.110 பதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டெலீட் மெசேஜஸ் அம்சத்தினை பெயர் மாற்றுவது, பல்வேறு சாதனங்களில் லாக் இன் செய்வது மற்றும் ஸ்டேட்டஸ் வீடியோ அளவை குறைப்பது போன்ற மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 

இந்த அம்சத்தினை முதலில் டிஸ்-அப்பியரிங் மெசேஜஸ், டெலீட் மெசேஜஸ் என இரு பெயர்களை மாற்றி தற்சமயம் எக்ஸ்பையரிங் மெசேஜஸ் என அழைக்கிறது.குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட சிறிது நேரத்தில் அவற்றை மறைந்து போக செய்யும் அம்சத்தினை வாட்ஸ்அப் தனது பீட்டா செயலியில் சோதனை செய்து வருகிறது

இதைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் பல சாதனங்களில் லாக்இன் செய்யும் அம்சத்தினை வாட்ஸ்அப் வழங்க இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் என வெவ்வேறு சாதனங்களில் ஒரே அக்கவுண்ட்டிற்கு லாக் இன் செய்யலாம். இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. இந்த அம்சம் மேம்படுத்தப்பட்டு விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது,

முதற்கட்டமாக இந்த அம்சம் குரூப்களில் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் இது அனைத்து சாட்களிலும் சேர்க்கப்படுகிறது. மேலும் எக்ஸ்பையரிங் மெசேஜஸ் அம்சத்தை செயல்படுத்தி இருக்கும் சாட்களை குறிக்கும் இன்டிகேட்டர் ஒன்றும் வழங்கப்படுகிறது. இது சாட் பட்டியலில் காணப்படும்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ அளவினை 30 நொடிகளில் இருந்து 15 நொடிகளாக மாற்றப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாட்ஸ்அப் சர்வெர் ஓவர்லோடு ஆவதை தடுக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பதற்ற நிலை முழுமையாக சரியாகும் வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :