Whatsapp யில் வருகிறது டெலிக்ராம் போன்ற அம்சம் இனி செலிப்ரட்டி உடன் நீங்கள் பேசலாம்

Whatsapp யில்  வருகிறது  டெலிக்ராம் போன்ற அம்சம் இனி செலிப்ரட்டி உடன் நீங்கள் பேசலாம்
HIGHLIGHTS

இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலியான வாட்ஸ்அப் டெலிகிராம் போன்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் வாட்ஸ்அப் சேனல்களில் Directory Search அம்சத்தைச் சேர்த்துள்ளது,

இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் புதன்கிழமை அன்று WhatsApp Channel இந்தியாவில் அறிமுகம் செயாது

மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலியான வாட்ஸ்அப் டெலிகிராம் போன்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் சேனலுக்காக இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் வாட்ஸ்அப் சேனல்களில் Directory Search அம்சத்தைச் சேர்த்துள்ளது, இது பயனர்கள் தங்களுக்குப் பிடித்த கன்டன்ட் உருவாக்குபவர்கள், பிஸ்னஸ் அல்லது பிரபலங்களால் உருவாக்கப்பட்ட சேனல்களைக் கண்டறிய உதவுகிறது. இதுமட்டுமின்றி, பயனர்கள் கிரிரியேட்டருக்கு மெசேஜ்  ரெகுவஸ்ட் வசதியையும் பெறுகின்றனர்.

Directory Search அம்சம்.

இன்ஸ்டன்ட் மெசேஜிங்  ஆப்  புதன்கிழமை அன்று WhatsApp Channel இந்தியாவில் அறிமுகம் செயாது, இதில்  இந்தியா உட்பட 150 நாடுகளில் உள்ள பயனர்களுக்காக தொடங்கப்படுகிறது, இந்த அம்சம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெவலப்பிங் மோடில் காணப்பட்டது, இப்போது இது வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும். மெட்டாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது சேனலில் இதை அறிவித்துள்ளார். அம்சங்கள் மற்றும் புதிய அப்டேட்கள் பற்றி மேலும் அறிய பயனர்கள் அதிகாரப்பூர்வ WhatsApp சேனலில் சேரலாம். இன்ஸ்டாகிராம் ஏற்கனவே இதேபோன்ற அம்சத்தை ஆதரிக்கிறது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். தற்போது வாட்ஸ்அப் நிறுவனமும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

whatsapp Channel

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்.

வாட்ஸ்அப் சேனல்கள் iOS மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அப்டேட்ஸ் என்ற புதிய டேப்பில் காட்டப்படும். இந்த டேப்பில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மெசேஜ்கள் மற்றும் புதிய வாட்ஸ்அப் சேனல்கள் அம்சம் இருக்கும். பயனர்கள் தங்கள் நாட்டின் அடிப்படையில் பில்ட்டர் மேம்படுத்தப்பட்ட டைரெக்டர் அணுகலாம் மற்றும் வாட்ஸ்அப்பில் போலவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரபலமான, மிகவும் செயலில் உள்ள மற்றும் புதிய சேனல்களைப் பார்க்கலாம்.

யூசர் பிரைவசிக்கு நம்பர் எது தெரியாது 

வேலிட்  இன்வைட் லிங்கை கொண்ட பயனர்கள் வாட்ஸ்அப் சேனல்களில் சேரலாம். பயனர் ப்ரைவசி பாதுகாக்க, சேனல்களை உருவாக்கும் பயனர்களின் போன் நம்பர் தகவலை ஆப் காட்டாது என்று நிறுவனம் கூறுகிறது. மெம்பர்கள் அதே சேனலுடன் இணைக்கப்பட்டுள்ள மற்றவர்களைப் பார்க்க முடியாது, மேலும் அவர்களின் போன நம்பர்களும் சேனல் உரிமையாளரிடமிருந்து மறைக்கப்படும்.

நிறுவனத்தின் படி வாட்ஸ்அப் சேனல்கள் மூலம் அனுப்பப்படும் மெசேஜ் 30 நாட்களுக்கு மட்டுமே தெரியும். மேலும், ஷேர்  செய்யப்பட்ட மேசெஜ்களுக்கு சேனல் மெம்பர் பதிலளிக்கலாம், இருப்பினும், பயனர்கள் இந்த மேசெஜ்களுக்கு பதிலளிக்க முடியாது. சேனலில் அனுப்பப்படும் மெசேஜ்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படும். பயனர்களின் லைவ் மெசேஜ்கள் க்ரூப் அரட்டைகள், சேட்கள் ஸ்டேட்டஸ், மெசேஜ்கள் மற்றும் லிங்க்கள் ஆகியவை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படும் என்று WhatsApp கூறுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo