Whatsapp யில் நீங்க எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஆண்ட்ராய்டு மற்றும் iOS யில்Dark Mode அம்சம் வந்தாச்சு.

Updated on 04-Mar-2020
HIGHLIGHTS

டார்க் மோடானது போனின் ஸ்க்ரீனிலிருந்து வெளிப்படும் ஒளியைக் குறைக்கிறது, இது போனின் பேட்டரி குறைவாக செலவாக்க உதவும்.

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, நிறுவனம் இறுதியாக Android மற்றும் iOS இன் அனைத்து பயனர்களுக்கும் டார்க் மோடை  உருவாக்கியுள்ளது. இது கடந்த பல மாதங்களாக பீட்டா சோதனையில் இருந்தது. இருண்ட பயன்முறையின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது சேட்டின்போது கண் பிரச்சினையை ஏற்படுத்தாது. கூடுதலாக, டார்க் மோடானது போனின் ஸ்க்ரீனிலிருந்து வெளிப்படும் ஒளியைக் குறைக்கிறது, இது போனின் பேட்டரி குறைவாக செலவாக்க உதவும்.

சாட் பாக்ஸ் இருள் சூழ்ந்த பேக்கிரவுண்டு கொண்டிருக்கும் நிலையில், குறுந்தகவல்கள் அனைத்தும் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. டார்க் மோட் அம்சத்தில் இரண்டு முக்கியமான அம்சங்களில் அதிக கவனம் செலுத்தியதாக வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது. 

அந்த வரிசையில் வாட்ஸ்அப் டார்க் மோட் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் லைட் மற்றும் டார்க் தீம்களில் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம். டார்க் தீம் முழுமையான கருப்பு நிறத்திற்கு மாற்றாக சற்றே சாம்பல் நிறம் கொண்டிருக்கிறது.

ரீடபிலிட்டி: ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் சிஸ்டம் டீஃபால்ட்களுக்கு நிகராகவும் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாத நிறங்களையும் டார்க் மோடில் வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளங்களை பயன்படுத்துவோர் புதிய டார்க் மோட் அம்சத்தினை சிஸ்டம் செட்டிங்களில் செயல்படுத்திக் கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கும் முந்தைய இயங்குதளங்களை பயன்படுத்துவோர் வாட்ஸ்அப் செட்டிங் — சாட்ஸ் — தீம் — டார்க் போன்ற ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும்.

தகவல்களுக்கு முன்னுரிமை: பயனர்கள் ஒவ்வொரு ஸ்க்ரீனில் சீரான கவனம் செலுத்த உதவ வேண்டும். இதற்கு நிறம் மற்றும் வடிவமைப்பு அம்சங்களை கொண்டு மிகமுக்கிய தகவல்கள் தனியே தெரியும்படி உருவாக்கப்பட்டது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :