வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகளவில் 200 கோடியை கடந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியை 2014-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியதைத் தொடர்ந்து 2017 ஜுலை மாதத்தில் வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை 100 கோடியை கடந்தது.
இத்துடன் வியாபாரம் செய்வோர் தங்களது வியாபாரத்தை வாட்ஸ்அப் பயன்படுத்தி எவ்வாறு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பது பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் பற்றிய தகவல்களும், பயனர் விவரங்களை பாதுகாக்கும் முறை பற்றியும் தெரிவித்துள்ளது.
பின் 2018-ம் ஆண்டிலேயே இது 150 கோடியாக அதிகரித்தது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை தற்சமயம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. புதிய மைல்கல் எட்டியதை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. வலைதள பதிவில் வாட்ஸ்அப் செயலி மூலம் பயனர்கள் உலகம் முழுக்க தொடர்புகொள்வது எப்படி என்பதை விவரித்துள்ளது.
முன்னதாக இந்தியாவில் வாட்ஸ்அப் பே அம்சத்தை வழங்குவதற்கான அனுமதியை வாட்ஸ்அப் பெற்று இருப்பதாக தகவல் வெளியானது. அந்த வகையில், இந்தியர்கள் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் இருந்து பண பரிமாற்றம் செய்ய முடியும்.