இப்பொழுது ஒரே நேரத்தில் டிவைஸில் WhatsApp அக்கவுண்ட் பயன்படுத்தலாம், கம்பெனியன் மோட் அறிமுகம்

இப்பொழுது ஒரே நேரத்தில் டிவைஸில் WhatsApp அக்கவுண்ட் பயன்படுத்தலாம், கம்பெனியன் மோட் அறிமுகம்
HIGHLIGHTS

மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் WhatsApp தொடர்ந்து பல புதிய புதிய அப்டேட்களை கொண்டு வருகிறது

இந்த அம்சத்தின் உதவியால் பயனர்களுக்கு ஒரே நேரத்தில் பல சாதனத்தில் சப்போர்ட் கிடைக்கும்

சமீபத்தில் வாட்ஸ்அப், காண்டாக்ட் எடிட் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் WhatsApp  தொடர்ந்து பல புதிய புதிய அப்டேட்களை கொண்டு வருகிறது. இப்பொழுது Whatsapp  கம்பெனியன் மோட்  அம்சம் கொண்டுவந்துள்ளது. இந்த அம்சத்தின் உதவியால் பயனர்களுக்கு ஒரே நேரத்தில் பல சாதனத்தில் சப்போர்ட் கிடைக்கும், அதாவது கம்பெனியின் மோட் அம்சத்தின் உதவிவியல் பயனர் ஒரு ஒரே whatsapp அக்கவுண்டை மற்றொரு டிவைஸில்  எளிதாக பயன்படுத்தலாம். தற்போது இந்த வசதியை பீட்டா சோதனைக்காக வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. விரைவில் இது அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும். சமீபத்தில் வாட்ஸ்அப், காண்டாக்ட் எடிட் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

கம்பெனியின் மோட் அம்சம்.

WhatsApp யின் Companion Mode அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்டிங்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் ஏற்கனவே உள்ள வாட்ஸ்அப் அக்கவுண்டை கூடுதல் மொபைல் போனில் இருந்து அணுக அனுமதிக்கிறது. இந்த அம்சம் சில காலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மோடில் பல சாதன ஆதரவின் நீட்டிப்பை செயல்படுத்துகிறது மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்பு 2.23.8.2 க்கான WhatsApp பீட்டாவுடன் வெளியிடப்பட்டது. இருப்பினும், மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ் தளமான வாட்ஸ்அப் நிறுவனம் அதை அனைத்து பயனர்களுக்கும் எப்போது வழங்கும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

கம்பெனியன் மோட் வாட்ஸ்அப்பில் எப்படி வேலை செய்யும்.

கம்பெனியன் மோடை பயன்படுத்த முதலில் whatsapp யின் சமீபத்திய அப்டேட்டிற்கு அப்டேட் செய்ய வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் செட்டிங்கின் கனெக்ட்டை சாதனத்திற்குச் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் ஒரு புதிய விருப்பம் இரண்டாம் நிலை மொபைல் போன் விருப்பத்தைப் பெறுவீர்கள். இப்போது QR கோட் ஸ்கேன் செய்வதன் மூலம், நீங்கள் செகண்டரி  போனில் WhatsApp ஐ அணுக முடியும்.

கான்டெக்ட் எடிட் அம்சம்.

நம்பரை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு மெசேஜ் அனுப்புவதும், சேமித்த நம்பரை எடிட் செய்வது மிகவும் கடினமான வேலை. இப்போது இந்த சிக்கலை சமாளிக்க வாட்ஸ்அப் கான்டெக்ட் எடிட் அம்சத்தை கொண்டு வருகிறது. இந்த அம்சத்தின் உதவியுடன், கான்டெக்ட்டை சேமிப்பது எளிதாக இருக்கும். வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் பீட்டா பதிப்பில் காணப்பட்டது. புதிய அப்டேட்டிற்குப் பிறகு, WhatsApp ப்ரோசெசரை விட்டு வெளியேறாமலே உங்களால் ஒரு எடிட் செய்யவும் சேமிக்கவும் முடியும். தற்போது, ​​ஒரு கான்டெக்ட்டை எடிட் , பயன்பாட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo