WhatsApp யில் Channels அம்சம் அறிமுகம், இந்த அம்சத்தால் என்ன பயன் தெரிஞ்சிக்கோங்க?
WhatsApp யில் மற்றொரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இதன் பெயர் Channels எண்று வைக்கப்பட்டுள்ளது
இந்த சேனல் அம்சத்தின் உதவியுடன், ஒரு பெரிய க்ரூபில் ஒரு செய்தியை ஒளிபரப்ப முடியும்
இன்ஸ்டன்ட் மல்டிமீடியா மெசேஜிங் ஆப் ஆன WhatsApp யில் மற்றொரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் பெயர் Channels எண்று வைக்கப்பட்டுள்ளது. இந்த சேனல் அம்சத்தின் உதவியுடன், ஒரு பெரிய க்ரூபில் ஒரு செய்தியை ஒளிபரப்ப முடியும். வாட்ஸ்அப் சேனல்கள் அம்சம் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சமாக இருக்கும்.
இந்த சேனல் அம்சத்தை அறிமுகப்படுத்துவது குறித்து, WhatsApp யில் நேரடியாக மக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து முக்கியமான அப்டேட்களை பெற எளிய, நம்பகமான மற்றும் தனிப்பட்ட வழி என்று WhatsApp தெரிவித்துள்ளது. 'அப்டேட்ஸ்' என்ற புதிய டேபுக்கு 'சேனல்களை' கொண்டு வருகிறது, அங்கு உங்களின் 'ஸ்டேட்டஸ் ' மற்றும் போலோவர்ஸ் சேனல்களைக் காண்பீர்கள். வாட்ஸ்அப் சேனல்கள் அம்சம் கொலம்பியா மற்றும் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
WhatsApp Channels என்றால் என்ன ?
WhatsApp Channels அதன் ப்ரோடகாஸ்ட்டின்ஒரு நீட்டிக்கப்பட்ட வடிவமாகும், சேனல்கள் ஒரு வழி ப்ரோடகாஸ்ட் கருவியாகும், இதன் மூலம் அட்மின் டெக்ஸ்ட் , போட்டோக்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் போல்ஸ் போன்றவற்றை அனுப்ப அனுமதிக்கிறது. உங்கள் விருப்பப்படி எந்த சேனலையும் போலோ செய்யலாம். இதற்காக, ஒரு சர்ச் பயிலும் உருவாக்கப்படும், அதில் உங்கள் என்டர்டைன்மெண்ட் , கேம்கள் அணிகள்(teem), உள்ளூர் அதிகாரிகள் பற்றிய அப்டேட்களை பெற முடியும்.
அதில் உங்கள் ஃபோன் நம்பர் அவரது அட்மின் அல்லது பிற போலோவர்ஸ் பார்க்க முடியாது. நீங்கள் எந்த சேனலைப் போலோ செய்ய விரும்புகிறீர்கள் என்பது முற்றிலும் உங்களுடையது மற்றும் உங்கள் விருப்பம் தனிப்பட்டதாக இருக்கும். உலகம் முழுவதும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது தங்கள் சேனலை யார் போலோ செய்யலாம் என்பதையும், மக்கள் பைலை தேடும்போது அவர்களின் சேனலைக் கண்டுபிடிக்க வேண்டுமா இல்லையா என்பதையும் அட்மின்கள் தீர்மானிக்க முடியும். தற்போது சேனல்கள் என்க்ரிப்ட் செய்யப்படவில்லை, ஆனால் நிறுவனம் அதை பரிசீலித்து வருகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile