உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ் அப், சமீபத்தில் தனது தனியுரிமை கொள்கையில் மாற்றம் செய்தது. புதிய மாற்றத்திற்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு எழந்ததை தொடர்ந்து தனியுரிமை கொள்கையை அமலாக்குவதை வாட்ஸ்அப் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில் வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவை பதிளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், வாட்ஸ்அப் செயலி இந்திய பயனர்களுக்கு மிக குறைந்த அளவு தனியுரிமையை வழங்க முயற்சித்துள்ளது. மேலும் பேஸ்புக்குடன் தகவல்களை பகிராவிட்டால் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என உத்தரவு பிறப்பித்தது என வாதிட்டார்.
மனு விசாரணையின் போது, பணத்தை விட தனிப்பட்ட தகவல்களை இந்திய மக்கள் பெரிதாக கருதுகின்றனர். மக்களின் தனியுரிமையை பாதுகாக்க நாங்கள் தலையிட வேண்டியிருக்கும் என கருத்து இருக்கிறது