வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆண்ட்ராய்டு தளத்தில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இது IOS தளத்தில் பயன்படுத்த முடியாமல் இருந்தது நிறுவனம் விரைவில் ஐஒஎஸ் தளத்திற்கும் வரும் என அறிவித்து இருந்தது அதனை தொடர்ந்து இப்பொழுது ஐபோன் பயனர்களான IOS தளத்திலும் இப்பொழுது இந்த பிஸ்னஸ் ஆப் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் சிறு வியாபாரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் தளமாக விளங்குகிறது. இந்த செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல் அம்சம் வியாபாரம் செய்யும் பயனரை வியாபார விவரங்களை விரிவாக பதிவிட வழி செய்கிறது. அதன் மூலம் பயனர்கள் வியாபார விவரம், வலைதளம், முகவரி, தொடர்பு முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவிடலாம்.
இதுமட்டுமின்றி வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பதில் அனுப்ப ஏதுவாக மெசேஜிங் டூல்ஸ் அம்சம் வழங்கப்படுகிறது. இதனை கொண்டு பயனர்கள் உடனடியாக பதில் அளிப்பது, வாழ்த்து குறுந்தகவல் மற்றும் பல்வேறு சேவைகளை இயக்க முடியும்.
இன்று முதல் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஆப் ஸ்டோரில் டவுன்லோடு செய்ய கிடைக்கிறது. முதற்கட்டமாக இந்தியா, பிரேசில், ஜெர்மனி, இந்தோனேசியா, மெக்சிகோ, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் கிடைக்கும் என்றும் அதன் பின் வரும் வாரங்களில் மற்ற நாடுகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாம் பார்த்தால் பிஸ்னஸ் ஆப் யில் இப்பொழுது வழங்கப்பட்டுள்ளது மேலும் நிறுவனம் மேலும் புதிய அம்சங்களை சேர்த்து கொண்டே வருகிறது 2019 பொதுத் தேர்தல்கள் விரைவில் இந்தியாவில் தொடங்கும் மற்றும் தேர்தலுக்கு முன்னர், Whatsapp சில புதிய பிரைவசி செட்டிங்களை பெற்றுள்ளது. ஒரு புதிய குரூப் பிரைவசி செட்டிங் அழைப்பிதழையும் இப்போது கிடைக்கும்.