வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் விரைவில் வரும் ஆப்பிளின் IOS யிலும் வரும்

Updated on 08-May-2018
HIGHLIGHTS

லீக் ஆகிய ஸ்கிறீன் ஷாட்ஸ் வாட்ஸ்அப்பில் இப்பொழுது கிரேடிங் மெசேஜ் அம்சத்தில் வேலை செய்கிறது, அது பயனர்களின் முதல் மெசேஜ் அல்லது 14 நாட்கள் வரை இனெக்டிவிட்டிக்கு பிறகு அவர்களுக்கு கிரேடிங் மெசேஜ் அனுப்பப்படும்

வாட்ஸ்அப் ஆப் யில்  க்ரூப் வீடியோ காலிங், மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்கள் என பல்வேறு புதிய அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், IOS க்கான வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஜனவரி மாத வாக்கில் வெளியிடப்பட்டது. சிறு நிறுவனங்கள் மற்றும் வியாபரங்களுக்கு ஏற்ற வசதிகளை வழங்கும் படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் wa.me என்ற சிறிய லின்க் உருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இது api.whatsapp.com முகவரியின் சிறிய பதிப்பாகும், இதை கொண்டு செயலியை பிரவுசரிலேயே திறக்க முடியும்.

வாட்ஸ்அப் ஐஓஎஸ் பிஸ்னஸ் செயலியை உருவாக்கும் பணிகளை வாட்ஸ்அப் ஏற்கனவே துவங்கிவிட்டதாக WABetaInfo தெரிவித்துள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வெளியானது முதல் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஐஓஎஸ் பதிப்பு பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் பணிகள் துவக் நிலையில் இருப்பதாகவும், இதன் வெளியாக சில காலம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் வாட்ஸ்அப் செயலியில் கிரீட்டிங் மெசேஜ் எனும் புதிய வசதியை சேர்க்க வாட்ஸ்அப் முடிவு செய்திருப்பதாகவும், இந்த அம்சம் புதிய வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு பயன்படுத்தாத போது கஸ்டமைஸ்டு மெசேஜை தானாக அனுப்பும். ஐஓஎஸ் பிஸ்னஸ் செயலியில் லேபெல்கள் மற்றும் க்விக் ரிப்ளை உள்ளிட்ட அம்சங்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் ஆன்ட்ராய்டு பிஸ்னஸ் செயலியில் வழங்கப்பட்ட அனைத்து அம்சங்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் புதிய பீட்டா பதிப்பில் டாப் எமோஜி எனும் புதிய வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜிக்கள் எமோஜி போர்டின் மேல் வைக்கப்படும் என கூறப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :