வாட்ஸ்அப்பிள் புதிய பிழை ப்லோக் செய்ய பட்ட யூசர் உங்களுக்கு மெசேஜ் அனுப்புகிறார்கள்

வாட்ஸ்அப்பிள் புதிய பிழை ப்லோக்  செய்ய பட்ட யூசர் உங்களுக்கு மெசேஜ் அனுப்புகிறார்கள்
HIGHLIGHTS

மெசேஜ் அனுப்புவதை தவிர பயனர்கள் ப்ரொபைல் போட்டோ மற்றும் ஸ்டேட்டஸ் பார்க்கலாம்

வாட்ஸ்அப் புதிய பிழை கண்டறியப்பட்டுள்ளது. இது ஆப் நீங்கள் பிளாக் செய்தவர்களையும் உங்களுக்கு மெசேஜ்  அனுப்ப வழி செய்கிறது.

தற்சமயம் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் பிளாக் செய்த கான்டாக்ட்கள், எப்படியோ உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடிகிறது. புதிய பிழையை வாட்ஸ்அப் உறுதி செய்யவோ இதை சரி செய்வதற்கான அப்டேட் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

இருப்பினும் நீங்கள் பிளாக் செய்தவர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்பாமல் இருக்க இந்த வழிமுறையை பின்பற்றலாம். முதலில் நீங்கள் பிளாக் செய்த கான்டாக்ட்-ஐ அன்பிளாக் செய்து பின் மீண்டும் பிளாக் செய்யலாம். இவ்வாறு செய்தால் பிளாக் செய்த கான்டாக்ட் உங்களுக்கு அனுப்பும் மெசேஜ் எதுவும் வராது.

பிளாக் செய்த கான்டாக்ட்களுக்கு மெசேஜ் அனுப்புவதோடு இந்த பிழை அவர்களின் ஸ்டேட்டஸ், ப்ரோஃபைல் தகவல் உள்ளிட்ட தகவல்களையும் பார்க்க வழி செய்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிளாக் செய்த கான்டாக்ட், பிளாக் செய்யாத கான்டாக்ட் பெறும் அனைத்து அம்சங்களையும் பெற முடிகிறது. இந்த பிழை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்ப்பது, க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சங்களை வழங்கியது. சமீபத்தில் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் சர்வர் சார்ந்த அப்டேட் மூலம் வழங்கப்பட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo