WhatsApp பல அசத்தும் வகையில் ஈமோஜி உடன் கலைக்கட்டுகிறது.
வாட்ஸ்அப் தொடர்ந்து பல புதிய புதிய அப்டேட் கொடுத்து அசத்தி வருகிறது இதனுடன் தற்பொழுது இந்த புதிய ஆண்ட்ராய்டு பீட்டா தளத்தில் பல்வேறு புதிய ஈமோஜிக்கள் மற்றும் நைட் மோட் வழங்கப்பட இருக்கிறது
புதிய ஈமோஜிக்கள் அடுத்த கூகுள் பிளே ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. முந்தைய அப்டேட்டில் டார்க் மோட் அம்சம் காணப்பட்ட நிலையில், தற்சமயம் இவை நைட் மோட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 அப்டேட்டில் புதிய டிசைன் கொண்ட சுமார் 155 ஈமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் 155 எமோஜிக்கள் புதிய வடிவமைப்பு பெற்றிருக்கின்றன. இவை வாட்ஸ்அப் அடுத்த ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்த வகையில் எதிர்காலத்தில் வரும் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் நைட் மோட் அம்சம் வழங்கப்படலாம்.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் நைட் மோட் வழங்கும் வேலைகள் நடைபெற்று வருவதை உணர்த்தியிருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் எனேபிள் செய்யப்படவில்லை என்ற போதும், அடுத்த பீட்டா அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய அப்டேட் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்ட டார்க் மோட் அம்சம் நைட் மோட் என பெயர் மாற்றம் பெறுவதை உறுதி செய்திருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile