WhatsApp யின் ப்ரோபைல் பிக்ஜர் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவே முடியாது

Updated on 15-Mar-2024
HIGHLIGHTS

WhatsApp யில் இப்பொழுது பயனர்கள் ஒருவரின் ப்ரோபைல் போட்டோவை ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவே முடியாது

ஒரு புதிய ப்ரைவசி அம்சம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பரவலாகக் கிடைக்கும்

கடந்த சில வாரங்களாக பயன்பாட்டின் பீட்டா பதிப்பில் செயல்பாட்டைச் சோதிக்கத் தொடங்கியுள்ளது மற்றும் அதை அனைத்து பயனர்களுக்கும் வெளியிடுகிறது.

WhatsApp யில் இப்பொழுது பயனர்கள் ஒருவரின் ப்ரோபைல் போட்டோவை ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவே முடியாது, ஒரு புதிய ப்ரைவசி அம்சம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பரவலாகக் கிடைக்கும் , Meta கடந்த சில வாரங்களாக பயன்பாட்டின் பீட்டா பதிப்பில் செயல்பாட்டைச் சோதிக்கத் தொடங்கியுள்ளது மற்றும் அதை அனைத்து பயனர்களுக்கும் வெளியிடுகிறது. இதற்கிடையில், நிறுவனம் பீட்டா சோதனையாளர்களுக்கு அரட்டையில் ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளைப் பின் செய்யும் அம்சத்தை வழங்கத் தொடங்கியுள்ளது, இதனால் தனிப்பட்ட சேட் அல்லது க்ரூப் சேட்டில்கூடுதல் தகவல்களை எளிதாகப் பெற முடியும்.

Meta இதுவரை ப்ரைவசி செயல்பாடு தகவலை பற்றி அறிவிக்காமல் இருந்தது அதாவது பயனர்களின் ப்ரோபைல் போட்டோ பகுதியில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது என்பதை பற்றிய விவரம், இருப்பினும் இந்த வெளியீட்டை ஆண்ட்ராய்டு போலிஷ் கண்டறிந்தது மற்றும் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பின் நிலையான மற்றும் பீட்டா வேர்சங்களில் உள்ள பயனர்கள் இப்போது மற்றொரு பயனர்களின் ப்ரொபைல் போட்டோக்களை பார்க்கும்போது ஸ்க்ரீனை பிடிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். பயனர்கள் வாட்ஸ்அப்பில் பீட்டா மற்றும் iOSக்கான ஸ்டேபிள் வெர்சன்களில் ஸ்கிரீன் ஷாட்களை எடுக்கலாம்.

Whatsapp

சில டிவைஸ்களில் ஆப்ஸின் பீட்டா மற்றும் ஸ்டேட்டன்ர்ட் வேர்சங்கள் இரண்டையும் பயன்படுத்தி WhatsApp ப்ரோபைல் படத்தின் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க முயற்சித்தோம், போட்டோவின் “ஆப்ஸ் கட்டுப்பாடுகள்” என்ற ஒரே காரணத்திற்காக ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்படவில்லை. இருப்பினும், தொடர்பின் ப்ரோபைல் போட்டோவின் கிளிக் செய்யும் போது தோன்றும் மினி பாப்-அப் டிவைஸ் மூலம் எங்களால் ஸ்கிரீன் ஷாட்களை எடுக்க முடிந்தது.

இருப்பினும், பயனர்களின் ப்ரோபைல் போட்டோவில் ஸ்கிரீன் ஷாட்களைத் தடுக்கும் அம்சம், வேறு எந்தப் பயனரும் போட்டோவையும் சேமிக்க முடியாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய செயல்பாடு, போட்டோ தோன்றும் அதே ஸ்க்ரீனில் மற்றொரு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ஒரு போட்டோவை கிளிக் செய்வதைத் தடுக்க முடியாது. இதேபோல், மெயின் சேட் லிஸ்ட்டில் உள்ள பயனரின் ப்ரோபைல் போட்டோவை தட்டினால், ஒரு சிறிய சிறுபடம் காண்பிக்கப்படும் மற்றும் வாட்ஸ்அப் அங்கு ஸ்கிரீன் ஷாட்களைத் ப்ளாக் செய்ய முடியாது

இதையும் படிங்க: Motorola அறிமுக செய்ய இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் எப்போ தெரியுமா?

இதற்க்கு நடுவில் பீச்சர் ட்ரேக்கர் WABetaInfo யின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான பயன்பாட்டின் புதிய பீட்டா வெர்சனில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, இதில் சேட்டின் மேல் பல மெசேஜ்களை பின் செய்யும் திறன் கொண்டது. பயனர்கள் தற்போது ஒரு மெசேஜை பின் செய்ய முடியும், ஆனால் இது வரவிருக்கும் அப்டேட்டில் விரிவாக்கப்பட்டு ஒரே நேரத்தில் மூன்று மெசேஜ்களை பின் செய்ய அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீட்டா டெஸ்ட்டில் நீங்கள் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 2.24.6.15 க்கு WhatsApp பீட்டாவை அப்டேட்டின் மூலம் சிறந்த அம்சங்களை சோதிக்க முடியும். பின்னர் இது iOS மற்றும் Android இல் உள்ள அனைத்து பயனர்களுக்கும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :