வாட்ஸ்அப் ஆப்யில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ கால் வசதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சேர்க்கப்பட்டது.
பயனுள்ள அம்சம் என்றாலும், வீடியோ கால் மேற்கொள்வது சற்றே சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. முதலில் ஒரு நபருடன் வீடியோ கால் துவங்கி, பின் மற்றவர்களை அதில் இணைத்துக் கொள்ள வேண்டும். தற்சமயம் சிக்கல் நிறைந்த அம்சமாக இருந்தாலும், விரைவில் இது எளிமையாக்கப்படுகிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.9 ஆப்யில் வீடியோ கால் செய்ய பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் க்ரூப் சாட் செய்யும் போது ஒற்றை க்ளிக் மூலம் வீடியோ கால் செய்யலாம். பலருக்கு ஒரே சமயத்தில் வீடியோ கால் செய்ய க்ரூப் காண்டாக்ட்கள் இடம்பெற்றிருக்கும் ஸ்லைடிங் டிரே பயன்படுத்தலாம். புதிய அப்டேட் மூலம் க்ரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலியில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் IOS ஆப்யில் ஏற்கனவே க்ரூப் வீடியோ கால் பட்டன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் IOS. இயங்குதளத்தில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில பயனர்கள் 2015 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட மெசேஜ்கள் அழிந்து போனதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும் பிழை குறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை
சமீபத்தில் லாட்ஸ்அப் ஆப்யில் கண்டறியப்பட்ட பிழை பயனரின் பழைய மெசேஜ்களை தானாக அழிக்க செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. பலர் தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்கள் தானாக அழிந்துவிட்டதாக அவரவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.