பிளாக்பெரி இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலிக்கான வசதி 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. முன்னதாக ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் போன் 7 இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை 2016 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டது.
மேலும் இந்த செயலிக்கான அப்டேட்களும் வழங்கப்படாது. முன்னதாக 2017 ஆம் ஆண்டு விண்டோஸ் போன் 8.0 தளத்தில் வாட்ஸ்அப் வசதி நிறுத்தப்பட்டது. தற்சமயம் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் தளங்களின் பட்டியலை அந்நிறுவனம் தனது வெப்சைட்டில் மாற்றியிருக்கிறது.
இதை அடுத்து விண்டோஸ் போன் தளங்களில் வாட்ஸ்அப் சேவை இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் வாட்ஸ்அப் செயலியை விண்டோஸ் 10 தளங்களில் பயன்படுத்த முடியாது.
விண்டோஸ் போன் தளத்தில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட இருக்கும் நிலையில், அந்நிறுவனம் சர்வதேச விண்டோஸ் தளத்துக்கான (Universal Windows Platform – UWP) புதிய செயலியை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆப் சமீபத்திய விண்டோஸ் போன் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் இயங்கும் என கூறப்படுகிறது.