வாட்ஸ்அப் புதிய பீட்டா பதிப்பில் (2.18.179) உங்களுக்கு வரும் மெசேஜ்களை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் போது லேபெல் செய்யப்படுகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் ஃபார்வேர்டு மெசேஜ்களில் இனி ஃபார்டுடெடு (Forwarded) என்ற லேபெல் இருக்கும்.
இந்த புதிய அம்சம் மூலம் இனி உண்மையான மெசேஜ்கள் மற்றும் ஃபார்வேர்டு செய்யப்பட்ட மெசேஜ்களுக்கு வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். இந்த லேபெல் மெசேஜை அனுப்புவோர் மற்றும் அதனை பெறுவோருக்கும் காணப்படும். முன்னதாக பீட்டா செயலியில் மீடியா விசிபிலிட்டி அம்சத்தை மறைக்கும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இது கேலரியில் இருக்கும் வாட்ஸ்அப் மீடியாவை மறைக்கவோ அல்லது காண்பிக்கவோ செய்யும்.
இந்த அம்சத்துடன் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இது பீட்டா பயனர்களை மிக எளிமையாக கான்டாக்ட்களை சேர்க்க வழி செய்கிறது.
புதிய ஃபார்வேர்டெடு லேபிலை பார்க்க உங்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் வரும் மெசேஜ்களை தேர்வு செய்து மற்றவர்களுக்கு வாட்ஸ்அப்-இல் ஃபார்வேர்டு செய்ய வேண்டும். இந்த லேபில் மெசேஜின் மேல்புறம் பார்க்க முடியும். குறிப்பாக இந்த லேபிளலை மறைக்கச் செய்யும் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் மெசேஜ்களை மற்றவர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் அதில் ஃபார்வேர்டடு லேபில் இருக்கும்.
வாட்ஸ்அப் பீட்டா செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதி ஸ்பேம் மெசஜ்கள் அதிகம் பரப்பப்படுவதை தவிர்க்கவோ அல்லது தெரியப்படுத்தவோ ஏதுவாக இருக்கும். முன்னதாக ஃபார்வேர்டடு மெசேஜ் லேபெல் பிப்ரவரி மாத வாக்கில் காணப்பட்டது. தற்சமயம் பீடடா டெஸ்டிங்-இல் இருக்கும் இந்த அம்சத்தை உடனே பயன்படுத்த வாட்ஸ்அப் பீட்டா செயலியை ஆன்ட்ராய்டு சாதனத்தில் டவுன்லோடு செய்ய வேண்டும்.
மேலும் இந்த செயலி கூகுள் பிளே பீட்டா திட்டம் மற்றும் ஏபிகே மிரர் தளத்தின் ஏபிகே ஃபைல் வடிவிலும் கிடைக்கிறது. புதிய அம்சம் ஐஓஎஸ் தளத்தில் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.