WhatsApp யில் வருகிறது Snapchat போன்ற அம்சம் இனி முகம் நல்லா இல்லைன்னு கவலை படாதிங்க

Updated on 23-Oct-2024
HIGHLIGHTS

ஆண்ட்ராய்டுக்கான WhatsApp புதிய அம்சத்தைப் பெறலாம்,

இது வீடியோ கால்கள் மற்றும் ஆப் உள்ளே போட்டோ எடுப்பதை மிகவும் சிறப்பாக மாற்றும்.

புதிய அம்சம், போட்டோ எடுக்கும்போது அல்லது வீடியோ காலின்ன்போது பயனர்களின் முகத்தில் பில்டர்கள்

ஆண்ட்ராய்டுக்கான WhatsApp புதிய அம்சத்தைப் பெறலாம், இது வீடியோ கால்கள் மற்றும் ஆப் உள்ளே போட்டோ எடுப்பதை மிகவும் சிறப்பாக மாற்றும். ஒரு அம்சக் ட்ரேகர்கரின் கூற்றுப்படி, இன்ஸ்டன்ட் மேசெஜ்ங் தளமானது கேமரா எபக்ட்ஸ் டெஸ்ட் செய்கிறது.

புதிய அம்சம், போட்டோ எடுக்கும்போது அல்லது வீடியோ காலின்ன்போது பயனர்களின் முகத்தில் பில்டர்கள் , பெக்ரவுன்ட்கள் மற்றும் பிற எபக்ட்களை சேர்க்கும் என்று கூறப்படுகிறது. சில எபக்த்கள் மேனுவலாக இயக்கப்படும் என்று கூறப்படுகிறது, மற்றவை வெளிப்பாடுகள் மற்றும் சைகைகளின் அடிப்படையில் தானாகவே தூண்டப்படும்.

WhatsApp யின் கேமரா எபக்ட் அம்சம்.

வாட்ஸ்அப் அம்சங்களைக் கண்காணிக்கும் வேப்சைட்டன WABetaInfo யின் அறிக்கையின்படி, இந்த அம்சம் Android வெர்சன் 2.24.22.10 க்கான WhatsApp பீட்டாவில் காணப்பட்டது, இது தற்போது Play Store யில் கிடைக்கிறது. இந்த அம்சம் பீட்டா வெர்சனில் தோன்றும் ஆனால் தற்போது சில பீட்டா டெஸ்டிங்கில் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

WhatsApp Camera effects

அம்ச டிராக்கரால் செர்செய்யப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களின் அடிப்படையில், புதிய அம்சத்தை ஆப்யின் ப்ரைவசி செட்டிங்க்களில் இருந்து இயக்கலாம் அல்லது முடக்கலாம். Allow camera effects என்ற புதிய விருப்பத்தை செட்டிங்களுக்கு காணலாம், அதை இயக்கலாம் அல்லது முடக்கலாம். மிகவும் வெளிப்படையான அனுபவத்தை வழங்க, சில எபக்ட் உங்கள் முகம் மற்றும் கைகளைப் பிரதிபலிக்கும் என்று அம்ச விளக்கம் விளக்குகிறது.

போட்டோக்களை கிளிக் செய்ய அல்லது வீடியோ கால்களின்போது கேமராவைப் பயன்படுத்தும்போது இந்த அம்சம் கிடைக்கும் என்றும் விளக்கத்தில் கூறுகிறது.பயனர்களின் முகபாவனைகள், கை சைகைகள், அசைவுகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் இந்த எபக்ட்களில் சில தானாகவே பயன்படுத்தப்படலாம் என்பதை அம்ச கண்காணிப்பு காட்டுகிறது. டிஸ்ப்ளேவில் தெரியும் விருப்பங்களைப் பயன்படுத்தி மற்றவற்றை மேனுவலாக பயன்படுத்தலாம்.

இந்த அம்சம் ப்ரைவசி செட்டிங்கில் கற்றோல் செய்யப்பட்டுள்ளது, கூடுதலாக, இது கேமரா திரை மற்றும் வீடியோ அழைப்பு இடைமுகத்திலிருந்து நேரடியாக இயக்கப்படலாம் அல்லது முடக்கப்படலாம். கேமரா எஃபெக்ட்ஸ் எந்த என்க்ரிப்ஷன் புரோட்டோகால்களையும் சமரசம் செய்யாது என்பதையும், ஆன் செய்யப்பட்டாலும் கூட, வீடியோ கால்கள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டதாகவே இருக்கும் என்பதையும் ஃபீச்சர் டிராக்கர் வெளிப்படுத்தியது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :