வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் லாக்டு ஆடியோ ரெக்கார்டிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. புதிய பீடடா அப்டேட் செயலியின் வெர்ஷனை 2.18.102 ஆக இருக்கிறது.
புதிய லாக்டு ஆடியோ ரெக்கார்டிங் அம்சத்தை இயக்க வாட்ஸ்அப் திரையில் தெரியும் மைக் ஐகானை 0.5 நொடிகளுக்கு அழுத்தி பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்ததும், வாட்ஸ்அப்பில் லாக் மைக்ரோபோன் பட்டன் தெரியும். இதைனை பார்த்ததும் ஸ்வைப் செய்து லாக் ரெக்கார்டிங் அம்சத்தை ஆன் செய்யலாம்.
ஆடியோ ரெக்கார்டிங்-ஐ செயல்படுத்தியதும், யூசர் இன்டர்ஃபேஸ் மைக்ரோபோன் பட்டனை அழுத்தாமல் சாட் ஸ்கிரீனிற்கு எடுத்து செல்லும். இனி வரும் அப்டேட்களில் ஆடியோ பதிவுகளை அனுப்பும் முன் ஒருமுறை கேட்க செய்யும் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் அடுத்த அப்டேட்களில் ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்யும் முன் அவற்றின் அளவை பார்க்கும் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வழங்கப்பட்டு இருக்கும் லாக்டு ரெக்கார்டிங் அம்சம் விரைவில் ஐ.ஓஎஸ். இயங்குதளத்திலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக ஆடியோ பதிவு செய்ய மைக்ரோபோன் பட்டனை தொடர்ந்து அழுத்தி பிடிக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. ஏற்கனவே வாட்ஸ்அப் பீட்டா செயலியை பயன்படுத்துவோர் நேரடியாக பிளே ஸ்டோரில் இருந்து புதிய அப்டேட் டவுன்லோடு செய்ய முடியும்.