வாட்ஸ் அப் தனது அப்ளிகேஷன் அம்சங்களில் புது புது மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு குரூப் அம்சத்தில் மாற்றம் செய்தது அதனை தொடர்ந்து நேற்று இந்தப் ஆடியோ தகவல் பரிமாற்றம் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான வேலை கடந்த ஜனவரி மாதமே வாட்ஸ்அப் தொடங்கியது. தற்பொழுது இந்த சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்து அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் நீங்கள் ஆடியோ அனுப்புவதற்கு முன் அதைச் சோதித்துப்பார்க்க 'Audio Picker' அம்சத்தை இணைத்துள்ளது. இந்த அம்சமானது வாட்ஸ்அப்-ன் 2.19.89 பீட்டா அப்டேட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் வாட்ஸ் அப்பில் ஒரு Forward message-யை எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற அம்சம் இருந்தது. தற்போது இந்தியாவில் அதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒரு மெசேஜை ஐந்து முறை மட்டுமே அனுப்ப முடியும் என நடைமுறைப்படுத்தியது.
வாட்ஸ்அப் சமீபத்தில் வெளியிட்ட புது அம்சம் மூலமாக தவறான தகவல் பரிமாற்றங்களைக் குறைத்துள்ளது. ஒரு தகவல் அதிகமாகவோ, அடிக்கடியோ பரிமாற்றம் செய்யப்பட்டால் அதன் பயனர்களால் அந்தச் செய்தி எத்தனை முறை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதை வைத்து பயனர் அந்தத் தகவலின் நம்பகத் தன்மையைக் கேள்வி கேட்க முடியும்.
வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய அப்டேட் IOS ஐபாடிலும் கிடைக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.