Instagram ஸ்டோரியை திருட்டு தனமாக ஒருவருக்கு தெரியாமல் பார்ப்பது எப்படி
Instagram Stories அம்சம் உங்களைப் போலோவர்களுடன் உங்கள் போட்டோ, வீடியோக்கள் அல்லது டெக்ஸ்ட் போன்றவற்றைப் ஷேர் செய்ய உங்களை அனுமதிக்கிறது. இது ஒரு போஸ்ட் அல்லது ரீல்ஸ் இருந்து வேறுபட்டது, ஏனெனில் அதில் உள்ள கன்டென்ட் 24 மணிநேரத்திற்குப் பிறகு தானாகவே நீக்கப்படும். கூடுதலாக, ஸ்டோரீஸ் அப்லோட் பயனர் தனது ஸ்டோரீகளை பார்ப்பவர்களின் அக்கவுன்ட் பெயர்களைப் பார்க்க முடியும்.
இதன் பொருள் நீங்கள் ஒரு பயனரின் ஸ்டோரிகளை பார்த்தால், அவர் அதைப் பற்றி அறிந்து கொள்வார். இருப்பினும், சில நேரங்களில் நீங்கள் ஒரு பயனரின் ஸ்டோரியை பார்க்க விரும்புகிறீர்கள், ஆனால் அதைப் பற்றி அந்த நபருக்கே தெரிய கூடாது என நினைத்தால் இது உங்களுக்கு நல்ல விசயமாக இருக்கும்.
மற்ற பயனர்களின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீகளை அவர்களுக்குத் தெரியாமல் பார்க்க உங்களை அனுமதிக்கும் வழிகள் ஏதேனும் உள்ளதா? ஆம், ஒரு நபரின் ஸ்டோரிகளை நீங்கள் பார்க்க சில வழிகள் உள்ளன, அவர் அதை தெரிந்து கொள்ளவே முடியாது. இதை எப்படி செய்வது என்பதை இங்கு முழுசாக பார்க்கலாம்.
Method 1: Airplane Mode
இதில் முதலில் Instagram ஆப்யில் திறக்கவும், ப்போது உங்கள் மொபைலில் உள்ள ஸ்க்ரீனில் மேலிருந்து கீழே ஸ்வைப் செய்து ஷார்ட்கட் பேனலைக் கொண்டு வந்து இங்கிருந்து பிளைட் மோட் (Flight Mode) இயக்க வேண்டும். இப்போது இன்ஸ்டாகிராம் ஸ்க்ரீனுக்கு திரும்ப மேலே ஸ்வைப் செய்யவும், அந்த நபரின் ஸ்டோரீயை நீங்கள் பார்க்கலாம். பார்த்த பிறகு, நீங்கள் ஆப்பை மூட வேண்டும் மற்றும் Airplane Mode மீண்டும் off செய்யலாம். இதைச் செய்வதன் மூலம், அந்தக் அக்கவுண்டில் பயனரால் அவருடைய/அவள் கார்டில் ‘Seen’ யில் உங்கள் பெயரைப் பார்க்க முடியாது.
Method 2: Half-ஸ்வைப்
நீங்கள் எதாவது ஒரு ஸ்டோரியை பாதியாக ஸ்வைப் செய்து பார்ப்பதன் மூலம் உங்களின் பெயர் Seen ஆகாது, இதைச் செய்வதன் மூலம் நீங்கள் ஸ்டோரீயில் முழுப் பக்கத்தையும் பார்க்க முடியாது, ஆனால் ஒரு வழியில் நீங்கள் ஸ்டோரியை எட்டிப்பார்க்கலாம். ஸ்டோரியின் ஒரு படம் இருந்தால், அதன் ஒரு பார்வையை நீங்கள் காண்பீர்கள், ஆனால் ஒரு வீடியோ இருந்தால், நீங்கள் அதைப் பார்க்கவோ கேட்கவோ முடியாது.
இதுபோன்ற நிலையில் நீங்கள் Instagram திறக்க வேண்டும் மற்றும் இந்த அக்கவுன்ட்டின் Story பார்க்க விரும்புகிரிர்களோ அதற்க்கு முன்பு (மற்ற அக்கவுன்ட்) யில் ஸ்டோரியை திறக்கவும்.இப்போது ஸ்க்ரீனில் உங்கள் விரலைப் பிடித்து, மற்ற அக்கவுன்ட் (நீங்கள் பார்க்க விரும்பும் பயனர்) நோக்கி பாதி ஸ்வைப் செய்யவும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் விரலைப் பிடித்துக் கொண்டு பாதி ஸ்க்ரீனை மட்டுமே செல்ல வேண்டும். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் ஸ்டோரியை பார்க்கலாம். இதற்குப் பிறகு நீங்கள் முந்தைய அக்கவுன்டிலிருந்து திரும்பி வந்து இப்போது ஸ்க்ரீனில் இருந்து விரலை உயர்த்தலாம்.
Method 3: மூன்றாம் தரப்பு வெப்சைட்
தற்போது, வெப்சைட்டில் பல இணையதளங்கள் உள்ளன, அவை பொது அக்கவுன்ட்களாக இருக்கும் பயனர்களின் ஸ்டோரியை காண்பிக்கும். தார்மீக மற்றும் ப்ரைவசியின் பார்வையில் இது சரியான வழி அல்ல, ஆனால் நீங்கள் இன்னும் ஒருவரின் ஸ்டோரியை பார்க்க விரும்பினால், இதற்காக நீங்கள் ‘Instagram ஸ்டோரீகளை அநாமதேயமாகப் பாருங்கள்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகிளில் சர்ச் மற்றும் மேலே வரும் சர்ச்சை பயன்படுத்தலாம். அந்த நபரின் இன்ஸ்டாகிராம் ப்ரொபைலை வெப்சைட்டில் தேடலாம் அல்லது ப்ரோபைளின் URL மூலம் கண்டுபிடிக்கலாம். இங்கிருந்து அந்த நபரின் ஸ்டோரியை அவருக்குத் தெரியாமல் பார்க்கலாம். நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு ப்ரைவசி உட்பட்டது இல்லை , அவ்வாறு செய்ய நாங்கள் பரிந்துரைக்கவில்லை.
இதையும் படிங்க EPFO யின் புதிய அப்டேட் உங்கள் PF பணத்தை ATMயிலிருந்து எடுத்து கொள்ளலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile