புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளது. ஆதார் ஆப் இனி இருக்கும் இன்னும் பாதுகாப்பாக.

புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளது. ஆதார் ஆப் இனி இருக்கும் இன்னும் பாதுகாப்பாக.
HIGHLIGHTS

பாதுகாப்பானதாக மாற்ற இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (UIDAI) எம் ஆதார் செயலியின் புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளது

எம் ஆதார் செயலியை ஆங்கிலம் மட்டுமின்றி - தமிழ், இந்தி, பெங்காலி, ஒடியா, உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடா, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் அசாமீஸ் என மொத்தம் 13 மொழிகளில் இயக்க முடியும்.

ஆதார் செயலியை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (UIDAI) எம் ஆதார் செயலியின் புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களில் வாடிக்கையாளர்கள் முந்தைய பதிப்பை உடனடியாக அழித்துவிட்டு, புதிய வெர்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் மூன்றாம் தரப்பு செயலிகள் எதுவும் இயங்காது.

வாடிக்கையாளர்கள் ஆதார் சார்ந்து பல்வேறு அம்சங்களை செயலி மூலம் இயக்க முடியும். அதன்படி ஆதார் கார்டை டவுன்லோடு செய்வது, கியூ.ஆர். கோடு உருவாக்குவது, முகவரியை மாற்றுவது, ஈமெயில் முகவரியை உறுதிப்படுத்துவது போன்றவற்றை செயலி மூலம் இயக்கலாம்.

MAdhar செயலியை ஆங்கிலம் மட்டுமின்றி – தமிழ், இந்தி, பெங்காலி, ஒடியா, உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடா, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் அசாமீஸ் என மொத்தம் 13 மொழிகளில் இயக்க முடியும். 

எம் ஆதார் செயலியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போன் எண்ணை இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இவ்வாறு பதிவு செய்தவர்கள் செயலியில் தங்களின் ஆதார் விவரங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இத்துடன் செயலியை கொண்டு ஆதார் அல்லது பயோமெட்ரிக் அம்சத்தை லாக் அல்லது அன்லாக் செய்ய முடியும். ஆதார் பிரத்யேக சேவைகளை இயக்க வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் ப்ரோஃபைலை எம் ஆதார் செயலியில் பதிவிட வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo