ட்விட்டர் வெப் பயனர்களுக்கு புதிய இன்டர்ஃபேஸ் வழங்கும் பணிகள் நடைபெறுகிறது. ட்விட்டரில் புதிய வடிவமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டெஸ்ட் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய டிசைன் செலக்ட் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
புதிய வடிவமைப்பை விரும்பும் வாடிக்கையாளர்கள் செலக்ட் செய்து கொள்ளவோ அல்லது முந்தைய வடிவமைப்பிலேயே தொடரலாம். புதிய இன்டர்ஃபேசை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ‘opt-in’ ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். புதிய வடிவமைப்பில் இரண்டு அல்லது மூன்றடுக்குகளை கொண்டிருக்கிறது.
இத்துடன் இமோஜி பட்"ன், க்விக் கீபோர்டு ஷார்ட்கட்கள், மேம்படுத்தப்பட்ட டிரெண்ட்கள், அட்வான்ஸ்டு சர்ச் மற்றும் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய இன்டர்ஃபேஸ் பயன்படுத்த விரும்பாத பட்சத்தில் வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பழைய இன்டர்ஃபேசிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
சமீபத்தில் ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் அவரவர் விரும்பும் டைம்லைனை தேர்வு செய்து கொள்ளும் வசதியை சேர்த்தது. ட்விட்டர் இந்த வசசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தது. முன்னதாக இந்த வசதி IOS பயனர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், விரைவில் வலைதளத்தில் வழங்கப்பட இருக்கிறது.
ட்விட்டரில் டார்க் மோட் சீராக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி, விரைவில் மேம்படுத்தப்பட்ட டார்க் மோட் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். சில வாடிக்கையாளர்கள் டார்க் மோட் கருப்பு நிறத்திற்கு பதிலாக டார்க் புளு நிறத்தில் தோன்றுவதாக குற்றம்சாட்டியிருந்தனர்