Truecaller யின் புதிய அம்சம் இப்பொழுது iphone பயனருக்கும் கிடைச்சாச்சு

Updated on 24-Sep-2024

Truecaller யில் புதிய அம்சம் இந்த அம்சம் இதுவரை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே இருந்தது, ஆனால் இப்பொழுது iPhone யில் இந்த அம்சம் வந்துள்ளது சமீபத்திய ட்ரூகாலர் புதுப்பித்தலுக்குப் பிறகு, ஐபோன்களுக்கான ஆட்டோ-பிளாக் ஸ்பேம் அம்சத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், பயனர் ஸ்பேம் அழைப்புகளை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை. Truecaller செயலி ஸ்பேம் கால்களை கண்டறிந்து அவற்றை நிராகரிக்கும்.

ஆண்ட்ராய்டு இந்த அம்சம் இருக்கிறது , இதை கொண்டு வர முக்கிய காரணம் ஸ்பேம் கால் தொல்லையிலிருந்து விடுபெறுவதற்க்காக ஆகும், மேலும் இதன் மூலம் ஸ்பேம் கால் தொல்லையிலிருந்து விடுபெறலாம்.

நீங்கள் ஐபோன் பயனராக இருந்தால், இந்த அம்சத்தைப் பயன்படுத்த விரும்பினால், ஆட்டோ-பிளாக் ஸ்பேம் அம்சத்தை நீங்கள் செயல்படுத்த வேண்டும். ‘பாதுகாப்பு’ விருப்பத்திற்குச் செல்வதன் மூலம் இந்த விருப்பம் கிடைக்கும். இதற்குப் பிறகு, நீங்கள் எந்த ஸ்பேம் காலை பெற்றாலும், Truecaller அதை அடையாளம் கண்டு தானாகவே ஸ்பேம் காலை நிராகரிக்கும்.

ஸ்பேம் கால்களால் மிகவும் சிரமப்படுபவர்களுக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். தற்போது இந்த வசதி Truecaller பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மற்ற பயனர்களுக்கு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆட்டோ-பிளாக் ஸ்பேம் அம்சம் iOS 18 க்கு கொண்டு வரப்பட்டுள்ளது. iOS 18க்கு அப்டேட் செய்த பயனர்கள், சமீபத்திய Truecaller பதிப்பு 13.12 இல் அதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், தற்போது இது பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அறிக்கைகளின்படி, Truecaller ஐபோன் பயனர்களுக்காக மேலும் பல அம்சங்களை உருவாக்கி வருகிறது.

இதையும் படிங்க: Jio யின் இந்த திட்டம் குறைந்த விலையில் உங்க சிம் எக்டிவாக வைத்திருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :