ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால்,இந்த ஆப் டவுன்லோடு செய்வது நிச்சயம்.

Updated on 20-May-2020
HIGHLIGHTS

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய மொபைல் போன் நம்பர் அவசியம் என்பதால், அனைத்து பயணிகளும் மொபைல் வைத்திருப்பர்

இந்தியாவில் சிறப்பு ரயில்களில் பயணம் செய்வோர் மத்திய அரசு வெளியிட்ட ஆரோக்யசேது செயலியை இன்ஸ்டால் செய்வதை மத்திய ரயில்வே அமைச்சகம் கட்டாயமாக்கி இருக்கிறது. எனினும், ஒவ்வொருத்தர் சூழலுக்கு ஏற்ப விலக்கு அளிப்பது பற்றி முடிவு எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

எனினும், மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆரோக்யசேது செயலி இன்ஸ்டால் செய்வது கட்டாயம் என தெரிவித்துள்ளது.நாட்டின் முக்கிய நகரங்களில் செல்லும் சிறப்பு ரயில்கள் பற்றி அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆரோக்யசேது செயலி இன்ஸ்டால் செய்வது கட்டாயம் என குறிப்பிடப்படவில்லை

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய மொபைல் போன் நம்பர் அவசியம் என்பதால், அனைத்து பயணிகளும் மொபைல் வைத்திருப்பர். இதன் காரணமாக ஆரோக்யசேது செயலி இன்ஸ்டால் செய்வது கட்டாயமாகிறது என ரயில்வே துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

'தேசிய ஊரடங்கின் போதும் இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க இருக்கிறது. இதில் பயணம் செய்வோர் ஆரோக்யசேது செயலியை தங்களது மொபைல் போன்களில் இன்ஸ்டால் செய்வது கட்டாயமாகிறது', என மத்திய ரயில்வே அமைச்சக ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :