அரசியல் விளம்பரத்துக்கு தடை கூறியது டிக்டாக்.

Updated on 04-Oct-2019

டிக்டாக் ஆப் மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலராகி  ஒரு ஆப் ஆகும். இந்த  செயலி சீனா நிறுவனத்தின்  ஒரு வீடியோ செயலி என்பது அனைவருக்கும் தெரிந்தது. டிக்டாக்  செயலியில் தனது  வீடியோக்களை  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும்  பதிவிட்டு வருகிறார்கள். என்பது  குறிப்பிட  தக்கது.மேலும் தற்பொழுது  சீனா நிறுவனமான டிக்டாக்  அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது.

சிறியவர் முதல் பெரியவர் வரை  டிக்டாக்  செயலியை  பற்றி தெரியாதவர்களே  இருக்க மாட்டார்கள் மேலும்  இந்த டிக்டாக்  செயலி  பச்சிலம் குழந்தைகளையும் இந்த ஆப் விட்டுவைக்கவில்லை , மேலும் டிக்டாக் நிறுவனத்தின்  குறிக்கோள் என்றால் மில்லியன் கணக்கில் மக்களை கவர்ந்து செல்வதே  டிக்டாக் செயலியின்  முக்கிய நோக்கம் ஆகும்.பெய்ஜிங் பைட்டன்ஸ்  டெக்னாலாஜி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது தான் டிக்டாக்.

இன்றைய மில்லெனியல் மக்களைக் கவர்வதே டிக்டாக் செயலியின் முக்கிய நோக்கமாகும். இதனால் கட்டண அரசியல் விளம்பரங்களுக்கு இனி டிக்டாக் அனுமதி அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் பைட்டான்ஸ் டெக்னாலஜி நிறுவனம் தயாரிப்பில் உருவான டிக்டாக் ஆப் இந்தியா மட்டுமல்லாது பல தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பலமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் ஒரு மாதத்தில் மட்டும் 500 மில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் டிக்டாக் செயலியில் உள்ளனர். டீன் ஏஜ் குறிப்பாக மில்லேனியலுக்கு அடுத்தத் தலைமுறையினரையே டிக்டாக் செயலி ஈர்க்க முயற்சித்து வருகிறது. தடை செய்யப்பட்ட ஒரு தலைப்பின் கீழ் பயனாளர்கள் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிக்டாக் துணைத்தலைவர் ப்லேக் சாண்ட்லீ கூறுகையில், “ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் விளம்பரம், அரசியல் தலைவர், முன்னாள் தலைவர், கட்சி, ஆட்சி, குழு, மாநில, தேசிய, சர்வதேச என எவ்வித அரசியல் சார்ந்த கட்டண விளம்பரங்களும் இனி எங்களது தளத்தில் இடம்பெறாது” எனக் கூறியுள்ளார்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :