டிக்டாக் , ம்யுசிக்கலி போலவே மிகவும் பாப்புலராக இருக்கும் செயலியாகும் இது அதனை தொடர்ந்து சமீபதத்தில் பைட்டான்ஸ் நிறுவனம் புதியதாக ஃபிளிப்சாட் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது இதன் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
பைட்டான்ஸ் நிறுவனம் ஸ்னாப் சாட் க்கு போட்டியாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்துள்ளது முதலில் சீனாவில் இந்த வீ சாட் செயலி மிகவும் பாப்புலராக இருந்து வருகிறது அதற்க்கு போட்டியாக தான் இந்த செயலியை வெளியிடப்பட்டுள்ளது.
ஃபிளிப்சாட் செயலி விருப்பம் சார்ந்த சோசியல் மீடியா செயலி. அதனுடன் சேர்த்து வழக்கமான தகவல் பரிமாற்றமும் செய்ய முடியும். சில குறிப்பிட்ட உள்ளடக்கங்கள் பற்றி விவாதிக்கவும் முடியும் என்று பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த ஃபிளிப்சாட் செயலி ஆண்டிராய்டு மற்றும் IOS என்ற இரு இயங்குதள வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்காது. ஐஎஸ் ஸ்டோரில் மட்டும் கிடைக்கும். ஆண்டிராய்டு பயனர்கள், பைட்டான்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலிகள் பக்கத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
அலிபாபா நிறுவனத்தின் அலிபே வாலெட் சேவையும் ஃபிளிப்சாட் செயலியில் கிடைக்கும்.
ஃபிளிப்சாட் செயலியில் போட்டோ, வீடியோ, வொய்ஸ் மற்றும் ஜிஃப் என வாட்ஸ்ஆப் செயலிகள் உள்ளது போன்று அனைத்து வகையிலும் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்