மக்களில் மத்தியில் TikTok அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்பொழுது TikTok மேல் இருக்கும் தடையை நீக்கியுள்ளது, இதனுடன் இதில் பல டிக்டாக் ஆப்யில் ஆபாச வீடியோக்கள் அதிகளவு பரவுவதால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது, மேலும் இதில் என்னதான் காமடி போன்ற பொழுது போக்கு இருந்தாலும் சிலர் திறமை என்கிற பெயரில் ஆபாசமாக வீடியோக்கள் எடுத்து வெளியிட்டனர். குறிப்பாக, இளம் பெண்களின் கவர்ச்சியான வீடியோக்கள் அதிக அளவில் பதிவிடப்பட, டிக் டாக் ஆபாச தளமாக பார்க்கப்பட்டது. மேலும் சிலர் தற்கொலை போன்ற பல புகார் தொடர்ந்து எழுந்ததால் இதை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது
அதனை தொடர்ந்து ஏப்ரல் 23ம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக்டாக் செயலியை தடை செய்ய உத்தரவிட்டது.
தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் மதுரைக் கிளையின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் சார்பில் கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் செயலிகள் தளத்தில் இருந்து டிக்டாக்கை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்.16ம் தேதி முதல் கூகுள் ப்ளேயில் அந்த செயலி ப்ளாக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை (ஏப்ரல் .24) ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆபாசமாக வீடியோக்கள் பதிவேற்றம் செய்தால், தானாகவே செயலி அதனை அழித்துவிடும் என டிக் டாக் நிறுவனம் உறுதியளித்தது.
மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கோர்ட் உத்தரவை அடுத்து நீக்கப்பட்ட டக் டாக் செயலி மீண்டும் கூகுள் பிளே ஸ்டோருக்கு பதிவிறக்கம் செய்யும் வகையில் வந்துள்ளது. இதனுடன் ஆப் ஸ்டோரில் நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்