சீனா நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.மேலும் குறுகிய காலத்திலே அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது மேலும் டிக்டாக் பிளேஸ்டோரில் அதிக டவுன்லோடை பெற்றுள்ளது
இந்தியாவிலும் டிக்டாக் செயலி அதிக பிரபலமாக இருக்கிறது. இந்தியாவில் டிக்டாக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிக்டாக் செயலியில் ஆபாச வீடியோக்கள், டிக்டாக் செய்யும் போது உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்று பல்வேறு காரணங்களால் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை நீங்கியது.
டிக்டாக் செயலி தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கருத்து தெரிவித்துள்ளார். அதனை நீக்குவது நல்லதுதான் என்று அவர் கூறியுள்ளார். RSS. அமைப்பும், டிக்டாக் வீடியோவை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதனை ஏற்று மத்திய அரசு டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதில் அளித்த டிக்டாக் அரசு விதிமுறைகளை ஏற்று சட்டவிசதிகளை பின்பற்றுவதாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 60 லட்சம் வீடியோக்கள் டிக்டாக் செயலியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன
இந்த நிலையில் தமிழக சட்டசபையிலும் டிக்டாக் வீடியோ விவகாரம் எழுப்பப்பட்டது. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் மணிகண்டன் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன ஆகியோரும் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.