TIKTOK ஆப்க்கு தடை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது

Updated on 17-Apr-2019
HIGHLIGHTS

தற்போது, ​​பயன்பாட்டை Google Play Store மற்றும் Apple App Store இல் இருந்து அகற்றப்பட்டது. இருப்பினும், பயனர்கள் முன்பே உள்ள இந்த ஆப் பயன்படுத்தி வந்து கொண்டு இருக்கீர்கள் என்றால் நீங்கள் அதை பயன்படுத்தலாம். ஆனால் இதில் புதியதாக யாரும் டவுன்லோடு செய்ய முடியாது

டிக் டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் ஆப் யில் ஸ்டோரில் இருந்து நீக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், டிக் டாக் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்க ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல்கள்தான் அத்தகைய ஏமாற்றத்தை டிக்டாக் செயலியின் ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

மேலும் நாம்  சமீபத்தில்  நடத்த பட்ட ஆய்வு  அறிக்கையில்  டிக் டாக்  ஆப் சுமார் 9கோடி  டவுன்லோடை  கடந்து 3 வது  இடத்தை  பிடித்தது என்பதை  அறிந்தோம் 

TikTok ஆப் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியால் பல்வேறு பிரச்சனைகளையும் சந்திக்கும் பலர் இந்த TikTok விபரீதத்தால் உயிரையும் விட்டிருக்கின்றனர் மேலும் பலர் பிரபலமாகியும் உள்ளனர்.

அந்தவகையில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீனாவில் இருந்து TikTok என்னும் ஆப் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலியை உலக முழுவதும் உள்ள பொதுமக்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அந்த செயலிக்கு தடை விதித்து மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இதில் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தாமல் ஆபாச  உடை அணிந்து நடிப்பதும்,மேலும் சில  டபுள் மீனிங்  வார்த்தைகளை  பேசுவது போன்றவை, இருந்துது  என்னதான்  இதில்  சிலர் உயர் இடத்திற்க்கு  சென்று இருந்தாலும்  பல  பேர் இதில்  பொது மக்களின் கமண்டுக்காக   நாளுக்கு நாள் தற்கொலைகளும் அதிக இருந்து 

தற்போது, ​​பயன்பாட்டை Google Play Store மற்றும் Apple App Store இல் இருந்து அகற்றப்பட்டது. இருப்பினும், பயனர்கள் முன்பே உள்ள  இந்த ஆப்  பயன்படுத்தி  வந்து கொண்டு இருக்கீர்கள் என்றால்  நீங்கள்  அதை  பயன்படுத்தலாம். ஆனால்  இதில் புதியதாக  யாரும்  டவுன்லோடு செய்ய முடியாது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :