டிகாட்க் சார்பில் எட்யுடாக் (Edutok) எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் செயலியில் இருந்தபடி தங்களுக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொள்ள முடியும்.
புதிய திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான டேட்டாக்களை உருவாக்கப்பட்டு அவை #Edutok எனும் ஹாஷ்டேக் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இவை இதுவரை சுமார் 4800 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் இவை 180 கோடிக்கும் அதிக முறை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
எட்யுடாக் திட்டத்தின் கீழ் டிக்டாக் நிறுவனம் ஜோஷ் டாக்ஸ் மற்றும் தி / நட்ஸ் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. இதன் மூலம் டிக்டாக் பயனர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் உருவாக்கப்படும் உயர் ரக கல்வி சார்ந்த தகவல்களை முதல்முறை டிக்டாக் பயனர்களுக்கு கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயனர்கள் புதிய #Edutok அனுபவத்தை டிக்டாக் செயலியில் பெற முடியும். டிக்டாக் செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
இத்துடன் டிக்டாக் நிறுவனம் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான டாப்பர், மேட் ஈசி மற்றும் கிரேடு அப் போன்றவற்றுடன் இணைந்து பாடங்கள் தொடர்பான டேட்டாக்களை செயலியில் வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் செயலியிலேயே பயனர்கள் கல்வி சார்ந்த பல்வேறு தகவல்களை வெவ்வேறு பிரிவுகள் மற்றும் மொழிகளில் பெற முடியும்.